எதிர்பாராத தன யோகம் பெறும் ஜாதக அமைப்பு
குரு பகவான் தான் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான வருமானத்தைக் கொடுக்கக்கூடியவர். ஜாதகத்தில் தன லாபத்திற்கு அதிபதி குரு பகவான். அதாவது தனக்காரகன் குரு. ராகு, கேது கிரகங்கள் திடீர் தன லாபத்தைக் கொடுப்பவர்கள் ஆவர்.
ஒருவருடைய ஜாதகத்தில் தன லாப பாவங்களான குரு, ராகு, கேது கிரகங்களின் நிலைகள் எவ்வளவு வலுப்பெற்று இருக்கிறதோ, அந்த அளவிற்கு திடீர் தன லாப யோகம் ஏற்படும்.
லக்னாதிபதி 2-ல் இருந்து 9-ம் அதிபதியின் லாபத்தில் இருந்தால், திடீர் தன லாப யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் தன அஷ;டமாதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருந்தால், திடீர் தன லாபம் உண்டாகும்.
9-ல் ராகு இருந்து, 9-ம் அதிபதி பலவானாக இருந்து, துலா, மகர லக்னங்களாக இருந்தால், திடீர் தன லாபம் உண்டாகும்.
ஜாதகத்தில் தனபாவத்தில் செவ்வாய், குரு சேர்க்கை பெற்று இருந்தால், எதிர்பாராத தன யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் சந்திரனில் இருந்து 3, 6, 10, 11 ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால், எதிர்பாராத திடீர் தன லாபம் உண்டாகும்.
ஜாதகத்தில் புதன் 5-ல் இருந்து லாபத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டால், எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
5-ல் சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்து 5-ம் இடத்தை சுக்கிரன் பார்த்தால், திடீர் அதிர்ஷ;டத்தால் வருமானம் பெருக செய்வார்கள்.
ஜாதகத்தில் லக்னாதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருந்தால், திடீர் தன லாப யோகத்தை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டு தனலாபாதிபதிகள் 4-ல் இருந்து 4-க்கு உடையவன் குருவின் பார்வை பெற்று இருந்தால், தன லாப யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் 10, 2க்கு உடையவர்கள் கேந்திர திரிகோணங்களில் இருந்தால், தன லாப யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் குரு 9-ம் அதிபதியாகி 8ல் இருந்தால், எதிர்பாராத அதிர்ஷ;டம் மூலம் தன லாபம் உண்டாகும்.
ஜாதகத்தில் குரு 9ம் பாவத்தில் கடகம், தனுசு ராசிகளில் இருந்து மகரத்தில் செவ்வாய், சந்திரனுடன் சேர்ந்து 10-ல் இருந்தால், திடீர் தன லாபத்தை கொடுப்பார்கள்.
ஜாதகத்தில் குரு, சந்திரர்கள் கடகத்திலிருந்து 2, 4, 5, 9, 11 ல் ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும், தன லாப யோகத்தை வாரி வழங்குவார்கள்.
மேஷ லக்ன ஜாதகத்தில் 4ல் குருவும், 7ல் சனியும் 8ல் சுக்கிரனும் இருந்து, ஏதாவது ஒரு பாவத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டால், திடீர் தன லாபமும் யோகமும் உண்டாகும்.