வாகன யோகம்
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை. ஏனென்றால் வண்டி, வாகன நெரிசல்களில் நடப்பதற்கு பாதைகளும் இல்லை, நடந்து செல்வதை யாரும் விரும்புவதும் இல்லை. எங்கு சென்றாலும் காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ சென்று இறங்குவதைத்தான் கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் சொந்தமான வாகனங்கள் இல்லை என்றாலும் கால் டாக்ஸி, ஆட்டோ என கட்டண வாகனங்களும் தாராளமாகவே கிடைக்கிறது. பஸ்ஸில் செல்பவர்களும் ரயிலில் பயணம் செய்பவர்களும் ஒரு புறம் ஷேர் ஆட்டோக்களும் பெருகிவிட்டதால், ஏதாவது ஒரு வாகனங்களில் பயணம் செய்யாதவர்களே இல்லை என கூறலாம். பள்ளிகளில் கூட இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதால் எல்லோருக்குமே வாகன யோகமானது இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், சொந்தமாக சம்பாதித்து அந்த வருமானத்தில் வண்டி வாகனம் வாங்க கூடியயோகம் யாருக்கு அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
வாகன யோகம் யாருக்கு உண்டு:
சுக்கிரன் பலமாக இருந்து விட்டால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், அதை அனுபவிக்கும் அதிஷ;டமும் உண்டாகும்.
பொதுவாக வாகனம் என்பது மனித வாழ்க்கையில் முக்கியமான விஷயமாகும். அத்தியாவசியமானதும் கூட. ஆனால் அதே வாகனம் உயிருக்கும் ஆபத்தை விளைக்கும் வல்லமை கொண்டது. எனவே தான் எந்த தசா புக்தி நடைபெறுகிறது என்பதை கணக்கிட்டு வாகனம் வாங்க வேண்டும்.
வாகனங்களை பதிவு செய்யும் போது நியூமராலஜியையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொருவருக்கும் பிறவி எண், விதி எண் என்பது இருக்கும். அதற்கு ஏற்றவாறு அல்லது அந்த எண்களுக்கு உரிய நட்பு எண்கள் இருக்கும் வகையில் வாகனத்தின் நம்பர் பதிவை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். வாகன காரகன் சுக்கிரன் குருவுடன் சேர்ந்து பாக்கியாதிபதியுடன் சேர்க்கை பெற்றால் வாகனம் வசதி அதிகமாக ஏற்படுகிறது.
ரிஷப விரதம் :
வைகாசி மாதத்தில் சிவபெருமானை வழிபடுபவர்கள் ரிஷப விரதம் மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள் வைத்திருப்பவர்களும், புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு. அதாவது, இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம், ஏற்கனவே வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விபத்தின்றி அந்த வாகனங்களை இயக்க முடியும். வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் கூடிய விரைவில் அதை வாங்கி மகிழ்வார்கள் என்பதும் நம்பிக்கை. இதே ரிஷப விரதத்தை மேற்கொண்டுதான் தேவர்களின் தலைவனான இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ;ப விமானத்தையும் பெற்றனர் என்கிறது புராணங்கள்.