Type Here to Get Search Results !

Translate

தோஷங்கள் நீங்க வாழை மர பரிகாரங்களும் பலன்களும்

தோஷங்கள் நீங்க வாழை மர பரிகாரங்களும் பலன்களும்

வாழைப்பழங்கள் கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


சிறப்புகளை பெற்ற வாழை மரத்தில் ஜோதிட ரீதியாக பலவிதமான தோஷங்களும் பிணிகள் மற்றும் கஷ்டங்கள் நீங்க பயன்படுத்தி வருகின்றனர்.

தோஷங்கள் நீங்க வாழை மர பரிகாரங்கள் :

தரித்திர பிணிகள் விலக :

தரித்திர பிணிகள் நீங்க மூன்று வாழை பூக்களை எடுத்து அமாவாசை திதி மற்றும் அஷ்டமி திதிகளில் சூரியன் மறையும் நேரத்தில் கடலில் குளித்து பிறகு, உடல் முழுவதும் படும்படி தடவி தான் அணிந்திருக்கும் ஏதேனும் ஒரு துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.

திருமணம் தடை விலக :

பெண்கள் : திருமண தடை விலக மூன்று சஷ்டி தினத்தில் வாழைப்பூ இதழில் 3 குண்டு மஞ்சளை முடிந்து வாழை நாரில் கட்டி குலை தள்ளும் இடத்தில் கட்ட வேண்டும்.

ஆண்கள் : குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.

குழந்தை பாக்கியம் பெற :

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோவிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன் மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

பித்ரு தோஷம் விலக :

100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.

செல்வம் பெருக :

சம்பள பணத்தையோ அல்லது சுப காரியத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ வாழைப்பூ இதழில் வைத்து வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது. அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.

அன்ன தரித்திரம் விலக :

அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்கி மஞ்சள் கலர் துணியில் முடிந்து கிழக்கு முகமாக நின்று ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி சாம்பிராணி புகையிட்டு பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.


துல்லியமாக ஜோதிடம் பார்க்க - 7904599321

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad