இந்த ஆறு ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி,
பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும் !!
இந்த ஆறு ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதார ரீதியான பொருத்தமும் நன்றாக இருக்கும்.
ஜோதிடத்தில் ராசிகள் குறித்து ஆராயும் பொழுது ஒரு தனி நபர் வாழ்க்கை பற்றி அனைத்தும் கூறப்படுகிறது. அதாவது ஒருவரின் பொருளாதார நிலை உயர்வு - வீழ்ச்சி, தொழில் லாப - நஷ்டம், ஒருவருக்கு திருமணயோகம் எப்போது இருக்கும் என்று அனைத்தும் கூறப்படுகிறது.
12 ராசிகளில், அனைத்து வகையிலான ராசி ஜோடிகளும் திருமண பந்தத்திற்கு சரியாக பொருந்துவதில்லை.
இதில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியானது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபம் என அனைத்தையும் அள்ளித்தரும் ஜோடிகளாக கருதப்படுகின்றன.
துலாம் - விருச்சகம் :
துலாம் மற்றும் விருச்சகம் ஒன்றிணையும் போது, அவர்களுக்கிடையேயான அன்பானது மிகவும் அதிகமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் ஆசைகளில் பேரார்வம் கொண்டவர்கள்.
விருச்சக ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது ரூடவ்டில்லா பாசம் பொழியும் நபர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்கள் இருவரின் உறவானது கடைசியில் சிறந்த ஜோடியாக திகழும்.
மீனம் - கடகம் :
உணர்வு ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் இவர்கள் ஒரு சிறந்த ஜோடி. இவர்கள் இருவரும் உணர்ச்சியின் வலையில் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். ஒரு கட்டத்தில் வெளியுலகை மறந்து ஒருவர் மீதான ஒருவர் காதலில் மூழ்கி திளைப்பார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சமநிலையில் இருப்பார்கள். இவர்கள் சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.
தனுசு - மேஷம் :
இந்த இரு ராசியும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் காதலை உலகறிய செய்ய கருதுபவர்கள். அறிவு சார்ந்து மிகவும் கூர்மையாக செயல்படக் கூடியவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் போது அவர்கள் முதலில் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். பிறகு மெல்ல, மெல்ல காதலில் திளைத்து சிறந்த ஜோடியாக மாறுவார்கள்.
மிதுனம் - கும்பம் :
ஒருவருடன் ஒருவர் சமநிலையில் பழகக்கூடியவர்கள். மிதுனம் எதிலும் நிச்சயமற்று இருப்பவர்கள். மறுபுறம் கும்பம் எதையும் யோசித்து கவனமாக செய்யக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் சேரும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது உருவாகும். இதனால், உறவை சமநிலையில் வழிநடத்தி சென்று வெற்றி பாதையை எட்டுவார்கள்.
கன்னி - ரிஷபம் :
கன்னி மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் ஒன்றிணையும் போது அவர்களுக்கு வெறும் உறவு மட்டுமின்றி, இவர்கள் குடும்பம் மற்றும் தொழிலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இல்லறம், வேலை, தொழில் மற்றும் வெற்றி என்று அனைத்திலும் தங்களின் சம பங்கினை அளிக்க இவர்கள் மறுக்கமாட்டார்கள்.
மகரம் - சிம்மம் :
மகர ராசி எந்த ராசிக்கும் வளைந்துக் கொடுத்து போகக்கூடிய ராசி ஆகும். முக்கியமாக சிம்ம ராசி என்றால் நூறு சதவீதம் பொருந்தும். மகர ராசி கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான ராசி. ஆனால், சிம்ம ராசி எதையும் சம அளவில் பார்த்து, ஆராயும் ராசி. ஆகையால், இவர்கள் தங்கள் இல்லறத்தில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.