சிரார்த்தம்
சிரார்த்தத்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும் மனைவி மாதவிலக்காய் இருந்தால் கூடாது.அனுஷம் நட்சத்திரம் உம் அமாவாசையும் சேரும் கார்த்திகை மாதத்தில் பிதுர்களுக்கு சிரார்த்தம் செய்தால் பிதுர்களுக்கு ஒரு வருஷத்துக்கு திருப்தி உண்டாகும்.
ஐப்பசி மாதத்தில் விசாகம் அல்லது சுவாதியில் அமாவாசை வரும் அன்றைக்கு சிரார்த்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தி அடைவர்
ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் சிரார்த்தமும் ஆடி மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையும் பிதுர்களுக்கு 12 வருஷம் திருப்தி அளிக்கும்
தை மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் அமாவாசை வரும் மாசி மாதத்தில் சதயம் நட்சத்திரம் அல்லது பூரட்டாதியில் அமாவாசை வரும். பங்குனியில் பூரட்டாதியில் அமாவாசை வரும்.இந்த மூன்று காலங்களும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலம் என்று சொல்லப்பட்டுள்ளது.
மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமானால் அது மிகவும் புண்ணிய காலம்.
அற்ப புண்ணியம் உள்ள மனிதர்களுக்கு கிடையாது
அந்நேரத்தில் அவிட்டம் நட்சத்திரமும் சேருமாயின் அப்போது பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்தவனுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளை பூர்த்தி செய்த பயன் கிடைக்கும்.
அக்காலத்தில் பூரட்டாதியும் சேரும் ஆனால் அதில் பிதுர்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள்.
கிருதயுகம் திரேதா யுகம் துவாபர யுகம் கலியுகம் ஆரம்பிக்கும் காலங்களிலும் சூரிய சந்திர கிரகண நேரங்களிலும் பிதுர்களுக்கு ஒருவன் எள்ளும் தண்ணீரும் இறைந்தால் அவன் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பலனை அடைவான்.
வசதி இருந்தால் இயன்ற அளவு பித்ருக்களுக்கு பிண்டம் போட்டுபிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும் வசதியில்லா விட்டால் சில எள்ளுக்களையாவது
நல்ல பிராமணர்களுக்கு நுனி கையால் கொடுக்க வேண்டும்.
அதற்கும் வழி இல்லாவிட்டால் ஏழு எட்டு எள்ளுடன் ஒரு கைத் தண்ணீராவது பிதுர்களுக்கு விட வேண்டும்.
எதுவுமே இல்லாத நிலை இருந்தால் காட்டுக்குச் சென்று சூரியன் முதலானோரை உரத்த குரலில் கூவி அழைத்துஎனக்கு பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு பொருள் ஒன்றும் இல்லை எனக்கு ஒன்றுமே இல்லை என்று என் இரண்டு கைகளையும் தூக்கி காட்டுகிறேன் எனது பிதிர்கள் திருப்தி அடைய வேண்டும் கண்டிப்பாக பிதுர் கடன் செய்யவேண்டும் என்று கூற வேண்டும்