சிராத்தம் செய்வதற்கு முன்பு
சிரார்த்தம் செய்பவர் ஒரு மாதம் அல்லது 16 நாட்களுக்கு முன் முகச்சவரம் எண்ணெய் தேய்த்தல்
உடலுறவு இவைகளை செய்யக்கூடாது பிறர் அன்னத்தை சாப்பிடக்கூடாது.
( நண்பன் சகோதரி குரு மாமனார் ஆகிய வீடுகள் தோஷம் கிடையாது )
கண்டிப்பாக முதல் நாள் இவற்றை செய்யவே கூடாதுசமுத்திர ஸ்தானம் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பின்பும் பஞ்சகவ்யம் அருந்தி யும் சிரார்த்தம் செய்ய வேண்டும் ஒரே பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால் தயிர் நெய் சாணம் கோமியம் இவற்றை கலந்து தயாரிப்பதுதான் பஞ்சகவியம் ஆகும்.
பஞ்சகவியம் மிகவும் விசேஷ தன்மை கொண்டது இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு
சிரார்த்தத்துக்கு முன்பும் பின்பும் பல் தேய்க்க கூடாது வாயை கொப்பளித்தால் போதுமானதாகும்