சந்தியா வந்தனம் என்றால் என்ன?
- வைணவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சந்தியா வந்தனம் செய்வார்கள்.
- சந்தியா வந்தனம் என்றால் என்ன? அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று பலருக்கு தெரியாது. அதன் அர்த்தத்தை இங்கு பார்ப்போம்.
- சந்தி என்றால் சந்திப்பு என்று பொருள். இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் சந்தி அல்லது சந்தியா என்று பெயர்.
- இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுளை வந்தனம் செய்வதற்கு சந்தியாவந்தனம் என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
- தினமும் இந்த சந்தியா வந்தனம் செய்வதால் புத்திக்கூர்மை மட்டும் இல்லை நன்மையும் கிடைக்கும். கடவுளை மனதில் நிறுத்தி தியானம் செய்வதனால் எந்த ஒரு தீமையும் நம்மிடையே நெருங்காது.
- ஒவ்வொருவரும் சந்தியா வந்தனம் செய்து கடவுளின் ஆசியையும், புத்திக்கூர்மையையும் பெற்று நலமோடு வாழ வேண்டும்.