ருத்ராட்ச ஜெப மாலையில் ஜெபம் செய்யும்
திசைகளின் பலன்கள்
இந்திர திசை கிழக்கு திசை தினம் தினம் அனைத்தும் உங்களுக்கு வசியமாகும்
அக்னி திக்கு தென்கிழக்கு திசை பலவகை நோய்களை விட்டு விலகி ஆரோக்கியம் உண்டாகும்
எமன் திசை தெற்கு நம்மால் வெல்ல முடியாத பல துன்பங்கள் தீமைகள் நமக்கு வரும்
நிருதி திக்கு தென்மேற்கு திசை
கொடிய வறுமை உண்டாகி வாட்டும்
வருண திசை மேற்கு நாம் சேர்த்து வைத்த செல்வம் செலவாகி போகும்
வாயு திக்கு வடமேற்கு திசை பேய் பிசாசு ஏவல் பில்லி சூனியங்கள் நம்மை விட்டு ஓடும்
குபேர திசை வடக்கு பொன் பொருள் கல்வி என பல வகை பேறுகள் வந்து சேரும்
ஈசான திக்கு வடகிழக்கு முக்தி என்னும் வீடுபேற்றினை அடையச் செய்யும்
ருத்ராட்ச மாலையைக் கொண்டு ஜபம் செய்பவர்கள் திசைமானி இன் உதவியால் சரியான திசையை தேர்ந்தெடுத்து ஜெபம் செய்து பலன்களை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் சிவாய நம