புதனால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் !!
அரசனைக் காணுதல் :
வசிஷ்ட மகரிஷி, இளனை பல இடங்களில் தேடி இறுதியில் புதனின் ஆசிரமத்தில் இளன், இளை என்ற பெயரில் வாழ்வதாக அறிந்து அங்கு செல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது. இளன் என்ற ஆண், முழு பெண்ணாக இளையாக வாழ்வதை கண்டு மனம் வருந்தினார் மகரிஷி
இளை தவம் மேற்கொள்ளுதல் :
இளை, மகரிஷியை கண்டதும் வணங்கி தான் யார் என்பதையும், இந்த நிலைக்கான காரணத்தையும் கூறுகிறாள். பின், தன்னுடைய காந்தர்வ திருமணத்தை பற்றியும் கூறுகிறாள்.
இளனுக்கு ஏற்பட்டதை அறிந்து மனம் வருந்துகிறார் மகரிஷி. பின், இந்த சாபத்தில் இருந்து நீங்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கச் சொல்லி அறிவுறுத்திகிறார்.
மகரிஷpயின் வழிகாட்டலின் படி சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் இளை. இளை மேற்கொண்ட கடுமையான தவத்தின் பலனாக சிவபெருமான் அவளுக்கு காட்சி அளிக்கிறார்.
பின், சிவபெருமானிடம் தனக்கு ஏற்பட்ட நிலையையும், அதில் இருந்து சாப விமோச்சனம் அளிக்கும் படியும் பணிந்து வணங்குகிறாள் இளை.
அதற்கு சிவபெருமான், பார்வதிதேவி அளித்த சாபத்தை என்னால் நீக்க முடியாது. ஆனால், நீ மேற்கொண்ட தவத்திற்கு பலனாக ஒரு வருடம் ஆணாகவும், ஒரு வருடம் பெண்ணாகவும் இருப்பாய் என வரம் அளிக்கிறார்.
சந்திர குலம் தோன்றல் :
சிவபெருமானின் வரத்தால் ஒரு வருடம் நாடாளும் அரசனாகவும், ஒரு வருடம் புதனின் மனைவியாகவும் வாழ்கிறாள் இளன் என்னும் இளை.
இந்நிலையில் புதனுக்கும், இளைக்கும் என்ற மகன் பிறக்கின்றான். புதனின் வாரிசான புரூரவன் சந்திர குலத்தில் வாரிசாகி அரசுரிமை பெற்று பல மேங்களையும், அசுவமேத யாகத்தையும் செய்து சக்கரவர்த்தியாகி தேவேந்திரனுக்கு இணையான வலிமையையும், கௌரவத்தையும் பெறுகிறார்.
நவகிரகத்தில் இணைதல் :
புதன் மேலும், கடும் தவம் புரிந்து நவகிரக பரிபாலனத்தில் இணைகிறார். மேலும், குருவே இல்லாமல் பல கலைகளை கற்றதாலும், ஆய கலைகள் அறுபத்தி நான்கினுக்கும் அதிபதியாக உயர்வான இடத்தை அடைகிறார்.
பிறப்பில் தாழ்வுகள் மற்றும் கலங்கம் இருந்தாலும் தன்னுடைய முயற்சியால் பல கலைகளை கற்று, இன்று கலைகளுக்கு அதிபதியாக உள்ள புதனை வணங்கி நாமும் அழிந்த மற்றும் அழியா பல கலைகளை கற்போம்.
புதன் தரும் தோஷங்கள் :
புதன் வலிமையிழந்தால் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான நிலை இருக்காது.
ஜாதகத்தில் புதன் மறைந்தால் நரம்பு தொடர்பான வியாதிகள் மற்றும் புத்திர விருத்தியில் குறைபாடு உண்டாகும்.
மேலும், தாய்மாமன் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
புதனுக்கான பரிகாரங்கள் :
திருவெண்காடு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை முறையாக வழிபட்டு வந்தால் தோஷம் குறையும்.
பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை தோறும் சென்று வர புதனால் ஏற்பட்ட தோஷத்தின் வீரியம் குறையும்.
மதுரையில் உள்ள சொக்கநாதரை புதன்கிழமை அன்று வணங்கி வர தோஷம் நீங்கும்.
மேலும் விவரங்களுக்கு - நக்கீரன் - 7904599321