செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தோஷமும் பரிகாரமும்
சங்கடர சதுர்த்தி எப்படி வந்தது?
விநாயகர் அங்காரகனுக்கு காட்சி அளித்து, இன்றுமுதல் அங்காரகன் என்று அழைக்கப்பட்ட உங்களை செவ்வாய் அல்லது மங்களன் என்று அழைப்பார்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி செவ்வாயின் அதிதேவதையாக, என் சகோதரனான முருகனே இருக்கும்படி வரம் அருளினார்.
சங்கடர சதுர்த்தி :
விநாயகர், மங்களனுக்கு காட்சி அளித்த நாள் செவ்வாய்க்கிழமை மற்றும் சதுர்த்தி திதி. செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி வளர்பிறையாக இருந்தாலும் சரி, தேய்பிறையாக இருந்தாலும் சரி மிகவும் விஷேசமான சங்கடர சதுர்த்தி தினமாக இருக்கும் என பெயரிட்டார், விநாயகப் பெருமான்.
மேலும், இந்த தினத்தில் பக்தியோடு விரதம் இருந்து என்னை வணங்குவோர்களின் சங்கடங்களை தீர்ப்பேன் என்று கூறினார்.
சிந்தாமணி விநாயகரின் தோற்றம் :
விநாயகப் பெருமான், செவ்வாய்க்கு காட்சி அளித்த இடத்தில் விநாயகப் பெருமானுக்கு கோவில் கட்டி, அதில் விநாயகரை பிரதிஷ;டை செய்தார் செவ்வாய். அவர் வழிபட்ட அந்த விநாயகருக்கு சிந்தாமணி விநாயகர் எனப் பெயர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். விநாயகரை வழிபட்டு வரங்களை பெற்றாலும் செவ்வாய், முருகனின் அம்சமாகவே செயல்பட்டார்.
செவ்வாயினால் ஏற்படும் தோஷங்கள் :
செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் 2,4,7,8 மற்றும் 12 ஆகிய இடங்களில் இருந்தால் களத்திரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவார்.
செவ்வாய் லக்னத்திற்கு 3-ல் இருந்தால் அண்ணன், தம்பி உறவில் பிரச்சனையை உண்டாக்கும். செவ்வாயின் அருள் இல்லாமல் மண் மற்றும் மனை யாருக்கும் அமையாது.
பரிகாரம் :
செவ்வாயின் பரிகார தலங்களில் முதன்மையானது வைத்தீஸ்வரன் கோவில் ஆகும். அங்கு சென்று வைத்தீஸ்வரனை வணங்கி வர இன்னல்கள் குறையும்.
ஒவ்வொரு சஷடி அல்லது கிருத்திகை அல்லது சதுர்த்தியன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் மங்களனால் ஏற்பட்ட தோஷம் குறையும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் துர்க்கையை வழிபட்டு வந்தால் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.
மேலும் தகவலுக்கு - நக்கீரன் - 7904599321