Type Here to Get Search Results !

Translate

பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கால பைரவர்
கால பைரவர் 

பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர  தேய்பிறை அஷ்டமி வழிபாடு 

அனைத்து சிவன் ஆலயங்களிலும் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். மேலும், தொழிலில் லாபம் உண்டாகும். 

இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி வழிபட்டால் மிகுந்த பலன்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும். எதிர்ப்புகளை விலக்கும்.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, நாமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கின்ற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தியையும் தரும் சனி தேவர் பணிந்தார்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும்? என்றால், அஷ்ட லட்சுமிகளும் அஷ;டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீர துவங்கிய மறு நொடியே நமது செல்வ செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

பைரவரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் :

  • கிடைக்க வேண்டிய பணம் வந்துவிடும்.
  • தர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
  • வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
  • சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
  • வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்து கொண்டே செல்லும்.
  • பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad