Type Here to Get Search Results !

Translate

உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!

கையில் எப்போதும் பணம் புரள
கையில் எப்போதும் பணம் புரள

 

உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.

செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ரூடவ்டு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.

நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.

இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.

தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.

பரிகார முறை :

புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வெற்றிலைகள் அனைத்தும் காம்புகளுடன் இருக்க வேண்டும். வெற்றிலையின் கீழ்நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது அவசியமாகும்.

புதன்கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக உங்கள் பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு, அந்த ஐந்து வெற்றிலைகளிலும் சிறிது அளவு பசு நெய்யினை நன்றாக இலைகள் முழுவதும் தடவ வேண்டும்.

பிறகு அந்த வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கைக்குட்டை அளவிலான தூய்மையான பட்டுத்துணியை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

அந்த பட்டுத்துணியில் இந்த ஐந்து வெற்றிலைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, இந்த வெற்றிலைகள் முழுவதும் மறைக்குமாறு நான்கு புறமும் நன்றாக மூடி, ஒரு சிகப்பு நிற நூல் கொண்டு வெற்றிலை முடிந்திருக்கும் பட்டுத்துணி மடிப்பை கட்டி முடிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு இந்த வெற்றிலைகள் அடங்கிய பட்டுத்துணி மடிப்பை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும். (அல்லது) உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் காக்க மறக்காமல் இந்த பரிகாரத்தை செய்து செல்வ செழிப்புடன் வாழுங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad