வாமதேவ்ய தியானம் - (உடலுறவைத் தியானித்தல்) |
வாமதேவ்ய தியானம் - (உடலுறவைத் தியானித்தல்)
பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த, ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான
முக்கியக் காரணங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். வாழ்க்கையின் ஓர் அடிப்படை அம்சமான
காமம், உடலுறவு போன்றவைபற்றி உரிய
வேளையில், உரிய முறைப்படி, தகுந்த ஒருவர் கற்பிப்பதன்மூலம் நல்ல
மனிதன் உருவாகிறான் நல்ல சமுதாயத்திற்கு அது வழிகோலுகிறது.
காமம், உடலுறவு போன்றவை தகுந்த
ஒருவரால் சிறுவயதிலேயே கற்பிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் சிந்திக்குமாறும்
தைத்திரீய உபநிஷதம் (3:6) அறிவுறுத்துகிறது.
கல்விக்காலம் முடிந்து வெளியேறும் போது ஒருவன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு இந்தக்
கல்வி, இந்தச் சிந்தனை வழிவகுத்தது.
உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை தெய்வீகமாகப் போற்றுவது இங்கு நினைவுகூரத்
தக்கது."
உடலுறவை ஒரு தியானமாகச் செய்யுமாறு இங்கே கூறப்படுகிறது.
ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு உடலுறவின் ஐந்து
நிலை களாகத் தியானிக்க வேண்டும்:
- ஹிங்காரம் - தம்பதிகள் சந்திப்பது
- பிரஸ்தாவம் - ஒருவரை ஒருவர் மகிழ்விப்பது
- உத்கீதம் - உறவுகொள்வது
- பிரதிஹாரம் - மகிழ்வது
- நிதனம் - காலம் கழிப்பதும் நிறைவும்
இது வாமதேவ்ய தியானம்; உடலுறவுடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
உடலுறவுடன் தொடர்புடைய இந்த வாமதேவ்ய தியானத்தை யார்
அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் தகுந்த இணை உடையவன் ஆகிறான் உறவுகளின் விளைவாக பிள்ளைச்செல்வம் பெற்றவன் ஆகிறான்; முழு ஆயுளையும் பெற்று
வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும்
புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன் எந்தப் பெண்ணையும்
இழிவுபடுத்தக் கூடாது - இது நிபந்தனை.