Type Here to Get Search Results !

Translate

கடன் நீங்கி... மகிழ்ச்சி அதிகரிக்க செய்யும் அற்புத விளக்கு...!!

 

பஞ்சகவ்ய விளக்கு
பஞ்சகவ்ய விளக்கு 

கடன் நீங்கி... மகிழ்ச்சி அதிகரிக்க செய்யும் அற்புத விளக்கு...!

குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக வீட்டில் பல வகையான ஹோமங்களை செய்ய வேண்டும். வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறெந்த பரிகாரத்தை செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்...!!

மிகப்பெரிய யாகத்தை செய்த பலனை கொடுக்கும் ஒரு விளக்கேற்றும் முறை. இதை கேட்க அதிசயமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. அப்படி மிகப்பெரிய பலனை கொடுக்கக்கூடியதுதான் பஞ்சகவ்ய விளக்கு.

பஞ்சகவ்ய விளக்கு என்றால் என்ன?

பசு மாட்டில் இருந்து பெறக்கூடிய ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டது தான் இந்த பஞ்சகவ்ய விளக்கு.

பஞ்சகவ்ய விளக்கு

பசும்பால்,
பசுந்தயிர்,
பசுஞ்சாணம்,
பசுநெய்,
பசுகோமியம்
ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு நன்கு காய வைத்து தயாரிக்கப்படும் ஒரு விளக்கு ஆகும். இந்த விளக்கு இணையதளங்களில் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கும் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.

தினமும் இந்த விளக்கை மகாலட்சுமிக்கு ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த விளக்கை ஏற்றும் பொழுது விளக்கும் உடன் சேர்ந்து எரிய விட வேண்டும். விளக்கில் இருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவும் பொழுது ஒரு ஹோமம் செய்த பலன் நமக்கு கிடைக்கும். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

மகாலட்சுமி படத்திற்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் பால் சார்ந்த பொருட்களை நைவேத்தியமாக படையுங்கள்.

ஐந்து முக விளக்கு மற்றும் பஞ்சகவ்ய விளக்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து, தூப, தீப ஆராதனை காண்பிக்க வேண்டும். அதில் நெய் மற்றும் நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். விளக்கு முழுவதுமாக எரிந்து முடிந்த பின்பு சாம்பலாகிவிடும். இது சுத்த திருநீறு ஆகும். எனவே இதனை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு வர நீங்கள் தொடங்கிய எல்லாமே வெற்றி அடையும். மேலும் இதனை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு உரமாகவும் கொடுக்கலாம்.

பலன்கள் :

புனிதமான பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உடனடியாக கலந்து இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தரும் ஆற்றல் மிக்கதாகும்.

பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும் இடத்தில் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும். அனைத்து தோஷங்களும் விலகும். கண்திருஷ;டி மறையும். பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும். அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பஞ்சகவ்ய விளக்கை இல்லத்தில் ஏற்றும்போது அக்னி ஹோத்ரம் யாகம் செய்த பலனை பெறலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad