லக்ஷ்மி விரதம் |
லட்சுமி விரதம் இருபது எப்படி ?
லட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
எந்த வீட்டிலெல்லாம் லட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறதோ... அந்த வீட்டுக்கு மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள்.
கார்த்திகை மாதம் 19ஆம் தேதி 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் கார்த்திகை மாதம் 29ஆம் தேதி 15.12.2021 புதன்கிழமை வரை லட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இத்தினங்களில் காலையிலும், மாலையிலும் லட்சுமி பூஜைகளை செய்வது மற்றும் ஒவ்வொரு நாளும் லட்சுமி மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் படிப்பதன் மூலம் செல்வ நிலையில் இருந்துவந்த இறக்க நிலையானது மாறும். தொழில் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடை மற்றும் ஞாபகங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
லட்சுமி விரதம் பற்றிய தகவல்கள் :
லட்சுமி பூஜை செய்யும்போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். லட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
பூஜை செய்யும்போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடி தியானிக்கலாம்.
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித எண்ணெய்களை கலந்து காலையும், மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ;டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
நடுநிலை தவறி உறவினர்களுக்கு அநீதி இழைத்தவர்கள், லட்சுமி விரதம் இருந்தால் அந்த பாவத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
பெண்களுக்கு ஒரு கஷ;டம் என்றால் லட்சுமியால் பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே பெரும்பாலான பெண்கள் லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக இந்த விரதத்தை அனுஷ;டித்து சண்முகனைப் பெற்றாள்.
விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ;டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப் பெற்றான்.
நந்தன் இந்த விரதத்தை கடைபிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
இந்த விரதத்தை அனுஷ;டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேர்வார்கள்.