Astro Jothidam
வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்தால் அனைத்து நற்பயன்களும் கிடைக்கும். விளக்கேற்றுவது என்பது சிறப்பான ஒரு விஷயம். தீபங்களில் பல வகையான தீபங்கள் உள்ளது. சகல சௌபாக்கியங்களும் விளக்கேற்றுவதானல் பெற முடியும். அப்படிப்பட்ட விளக்கை எந்த எந்த மாதங்களில் (மாதம் முழுவதும்) ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
- சித்திரையில் விளக்கேற்றினால் தான்யத்தைப் பெறுவார்.
- வைகாசியில் விளக்கேற்றினால் தனத்தைப் பெறுவார்.
- ஆனி மதத்தில் விளக்கேற்றினால் கன்னியைப் (திருமணம்)பெறுவார்.
- ஆடியில் விளக்கேற்றினால் ஆயுள் கூடும்.
- ஆவணியில் விளக்கேற்றினால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- புரட்டாசியில் விளக்கேற்றினால் பசுவைப் பெறுவார்கள்.
- ஐப்பசியில் விளக்கேற்றினால் அன்னத்தைப் பெறுவார்கள்.
- கார்த்திகையில் விளக்கேற்றினால் மோட்சம் கிடைக்கும்.
- மார்கழியில் விளக்கேற்றினால் பிணி விலகும்.
- தையில் விளக்கேற்றினால் வெற்றி கிடைக்கும்.
- மாசியில் விளக்கேற்றினால் பாவங்கள் போகும்.
- பங்குனியில் விளக்கேற்றினால் தர்மசிந்தனை பெருகும்.
- புண்ணியத்தை அருளும் விளக்கை மாதந்தோறும் ஏற்றி அனைத்து நலன்களையும் பெறுவோமாக.