![]() |
நவகிரகங்களை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் |
நவகிரகங்களை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்
❉ இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். கோள்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே ஜோதிடத்தின் அடிப்படையாகும்.
❉ நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
❉ பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர ஏழு கோள்கள் தேவர்கள் எனவும், அவர்கள் வௌ;வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக்கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் ஜோதிட நூல் கூறுகிறது.
❉ மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நடக்கும் திசை, கிரகம், நமக்கு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் எது என அறிந்து அதற்கேற்ப, தீய பலன்களை தரக்கூடிய கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
❉ தீய பலன் தரக்கூடிய கிரகங்களிடம் நற்பலன் பெறுவதற்கு நாம் குளிக்கும் போது அந்த கிரகங்களுக்குரிய பொருட்களை நீரில் கலந்து குளித்தால் நற்பலன்களை பெறலாம்.
சூரியன் :
❉ கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் :
❉ தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் :
❉ வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமணத்தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் :
❉ மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் :
❉ கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் :
❉ பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி :
❉ கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு :
❉ மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது :
❉ அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.