Type Here to Get Search Results !

Translate

எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Astro Jothidam

எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன
பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன.

எட்டு திசைகளில் தீபங்களை ஏற்றுவதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.


கிழக்கு திசை :


இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

மேற்கு திசை :

இத்திசையில் தீபம் ஏற்றினால் பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

வடக்கு திசை :

இத்திசையில் தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

தெற்கு திசை :

வீட்டில் இத்திசையை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாகும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

தென்கிழக்கு திசை :

இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

தென்மேற்கு திசை :

இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

வடகிழக்கு திசை :

இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வார்கள்.

வடமேற்கு திசை :

இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad