![]() |
பக்தியும் - தேவதை தியானமும் பகுதி -2 |
பக்தியும் - தேவதை தியானமும் பகுதி -2
தனது யாகத்தில் குறை நேர இருந்ததையும், திடீரென்று யாரோ ஒருவர் யாகக்களத்தில் புகுந்து அதனைச் சுட்டிக் காட்டியதையும் கண்ட மன்னன் உஷஸ்தியிடம் பேசினான்.
பிறகு, யாகத்தின் யஜமானனாகிய மன்னன் உஷஸ்தியிடம், 'நான் தங்களைப்பற்றி அறிய விரும்புகிறேன்' என்று கூறினான். அதற்கு உஷஸ்தி, ‘சக்ரரின் மகனான உஷஸ்தி நான்' என்று பதிலளித்தார்.
(உஷஸ்தியின் பெருமைகளைப்பற்றி ஏற்கனவே மன்னன் கேள்விப்பட்டிருந்தான். அவரே தம்மை நாடி வந்ததால் மகிழ்ச்சி யுடன்,) ‘இந்த யாகக் கிரியைகளுக்காக நான் தங்களைத் தான் தேடினேன். தாங்கள் கிடைக்காததால்தான் மற்றவர்களை நியமித்தேன்' (என்று அவரிடம் கூறினான்.)
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
(மேலும், மன்னன்
தொடர்ந்து,) 'எனக்காகத் தாங்களே
இந்த யாகக் கிரியைகள் அனைத்தையும் முன்னின்று நடத்தித் தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான். அதற்குச்
சம்மதித்த உஷஸ்தி கூறினார்: 'அப்படியே ஆகட்டும்.
இனி, இந்தப் பாடகர்களே என் அனுமதியுடன்
இந்த யாகத்திற்காகப் பாடட்டும். ஆனால் ஒன்று. இவர்களுக்கு எவ்வளவு வெகுமதி
அளிப்பீர்களோ அவ்வளவு வெகுமதி எனக்கும் வேண்டும்.' தர
அதன்பிறகு பிரஸ்தோதா உஷஸ்தியை அணுகி, 'ஐயா, தாங்கள் என்னிடம், 'ஓ பிரஸ்தோதா, பிரஸ்தாவத்தின் தேவதையை அறியாமல் நீ பிரஸ்தாவத்தைப் பாடினால் உன் தலை வீழ்ந்து விடும்" என்று கூறினீர்கள். அந்தத் தேவதை யார்?' என்று கேட்டார்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
அதற்கு உஷஸ்தி பிரஸ்தோதாவிடம், ‘பிராணன். உயிர்கள் அனைத்தும் பிராணனிலிருந்தே தோன்றுகின்றன, பிராணனிலேயே ஒடுங்குகின்றன. பிராண தேவதையே பிரஸ்தாவத்தின் தேவதை. இந்தத் தேவதையை அறியாத நிலையில், (நான் காரணத்தைக் கூறிய பிறகும்) நீ பாடியிருந்தால் உன் தலை வீழ்ந்திருக்கும்' என்று கூறினார்.
அதன்பிறகு உத்காதா உஷஸ்தியை அணுகி, 'ஐயா, தாங்கள் என்னிடம், “ஓ உத்காதா, உத்கீதத்தின்
தேவதையை அறியாமல் நீ உத்கீதத்தைப் பாடினால் உன் தலை வீழ்ந்துவிடும்” என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?' என்று கேட்டார்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
அதன்பிறகு பிரதிஹர்த்தா உஷஸ்தியை அணுகி, 'ஐயா, தாங்கள் என்னிடம், 'ஓ பிரதிஹர்த்தா, பிரதிஹாரத்தின் தேவதையை அறியாமல் நீ பிரதிஹாரத்தைப் பாடினால் உன் தலை வீழ்ந்து விடும்'' என்று கூறினீர்கள். அந்தத் தேவதை யார்?' என்று கேட்டார்.
அதற்கு உஷஸ்தி பிரதிஹர்த்தாவிடம், 'உணவு. உயிர்கள் அனைத்தும் உணவை உட்கொண்டே உயிர் வாழ்கின்றன. உணவே பிரதிஹாரத்தின் தேவதை. இந்தத் தேவதையை அறியாத நிலையில் (நான் காரணத்தைக் கூறியும்) நீ பாடியிருந்தால் உன் தலை வீழ்ந்திருக்கும்' என்றார்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
போற்றுகின்ற துதி, சொல்கின்ற சொல், பாடுகின்ற பாட்டு, ஜபிக்கின்ற மந்திரம் போன்றவற்றில் அவற்றின் பொருளறிந்து, உட்பொருளை உணர்ந்து ஈடுபட வேண்டும். அப்போது மட்டுமே உரிய பலன் கிடைக்கும். இந்த உண்மையை உஷஸ்தியின் கதை விளக்குகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
Kada..vul paramatma om namasivaya Siva sakti rajendran gnana mukti ooli is permanent Aatma happiest life activity
பதிலளிநீக்கு