![]() |
பக்தியும் தியானமும் |
பக்தியும் - தேவதை தியானமும் -பகுதி -1
- உத்கீத பக்தியுடன் இங்கே பிரஸ்தாவம், பிரதிஹாரம் ஆகிய இரண்டு பக்திகள் தியானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பிரஸ்தாவத்தின் தேவதை பிராணன், உத்கீதத்தின் தேவதை சூரியன், பிரதிஹாரத்தின் தேவதை உணவு. இந்தத் தேவதைகள் குறிப்பிட்ட பக்திகளாகத் தியானம் செய்யப் படுகின்றனர்.
- இந்தத் தியானத்தைப்பற்றி இந்தப் பகுதியில் பாப்போம். இதற்கு முன்னுரையாக ஒரு கதை வருகிறது. தியானத்தில் ஈடுபடும்போது
- , அதன் அடிப்படை உண்மைகளை உணர்ந்து ஈடுபட்டால் அதனால் எவ்வளவு பெரிய நன்மை விளைகிறது என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- சக்ரரின் மகனான உஷஸ்தி, திறமை மிக்கவளான தன் மனைவி யுடன் குரு நாட்டில் யானைப்பாகர்களின் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அங்கே புயல் மற்றும் ஆலங்கட்டி மழையின் காரணமாக (பயிர்கள் அழிய நேர்ந்தது. உஷஸ்தி) வறுமையில் வாடினார்.
- பசியால் வாடிய உஷஸ்தி யாசிப்பதற்காகச் சென்றார். அங்கே யானைப்பாகன் ஒருவன் உளுந்துப் பண்டத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் அவர் யாசித்தார். அதற்கு அந்த யானைப்பாகன், 'ஐயா, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற இந்த உளுந்துப் பண்டம் மட்டுமே என்னிடம் உள்ளது. வேறு எதுவும் என்னிடம் இல்லை' என்று கூறினான்.
- ‘அந்த உளுந்துப் பண்டத்தில் கொஞ்சம் எனக்குத் தா' என்று உஷஸ்தி யானைப்பாகனிடம் கேட்டார். அவனும் அதில் சிறிதைக் கொடுத்தான். அதன்பிறகு சிறிது குடிநீரை அளித்து, 'இதோ தண்ணீரும் உள்ளது, அருந்துங்கள்' என்று கேட்டுக்கொண்டான். அதற்கு உஷஸ்தி, 'வேண்டாம். அது எச்சில் தண்ணீர். அதைக் குடித்தால் நான் எச்சிலை உண்டதாக ஆகும்' என்று கூறினார்.
- ‘ உளுந்துப் பண்டமும் எச்சிலே அல்லவா!' என்று கேட்டான் யானைப்பாகன். 'உண்மைதான். ஆனால் அவற்றை உண்ணா விட்டால் நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன். தண்ணீர் குடிப்பதோ என் வசத்தில் உள்ளது' என்றார் உஷஸ்தி.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- உஷஸ்தி அந்த உளுந்துப் பண்டத்தில் ஒரு பகுதியை உண்டு விட்டு எஞ்சியதை மனைவிக்காக எடுத்துச் சென்றார். அவளோ ஏற்கனவே பிச்சையின்மூலம் நல்ல உணவைப் பெற்று உண்டு விட்டிருந்தாள். எனவே உஷஸ்தியிடமிருந்து பெற்ற உளுந்துப் பண்டத்தைத் தனியாக வைத்தாள்.
- காலையில் படுக்கையைவிட்டு எழுந்த உஷஸ்தி, ‘ஆ, சிறிது உணவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த மன்னன் யாகம் செய்யப் போகிறான். நான் அங்கே போனால் அவன் என்னையே எல்லா யாகக் கிரியைகளையும் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருப்பான்; நமக்கும் சிறிது பணம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
- உஷஸ்தி கூறியதைக் கேட்ட அவரது மனைவி, ‘சுவாமி, நீங்கள் நேற்று தந்த உளுந்துப் பண்டம் மட்டுமே உள்ளது' என்றாள். உடனே உஷஸ்தி அந்த உளுந்துப் பண்டத்தைச் சாப்பிட்டுவிட்டு யாகம் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்றார்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- கதையும் கருத்தும்
- . உண்ணும் உணவிலிருந்து பிராண சக்தி உருவாகிறது; பிராண சக்தி இல்லாமல் உடம்பு மற்றும் மனம் ஆகிய இரண்டு கருவிகளும் இயங்காது. எனவே சாஸ்திரங்களில் உணவு பற்றிய சிந்தனையில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்மிருதிகள் என்றல்ல, உப நிஷதங்களில்கூட உணவு பற்றிய ஆராய்ச்சியைக் காண முடியும். 'உணவின் முக்கியத்துவத்தையும் உணவு தானத்தால் வரும் பலனையும் அறிந்து தானம் செய்பவன் மக்கட் செல்வம், கால்நடை செல்வம், புனிதப்பேரொளி ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் பெறுவான்' என்கிறது தைத்திரீயம்..
- எந்த நல்ல விஷயமும் தகுதியற்றவர்களின் கையில் கிடைக்கும்போது அதன் நன்மை கெடுகிறது. அவ்வாறே உணவு விஷயத்திலும் காலப்போக்கில் பல்வேறு அர்த்தமற்ற நியதிகள் தோன்றின. உயர்ந்த ஜாதியினர் தாழ்ந்த ஜாதியினர் தரும் உணவைப் பெற்றுக்கொள்ளக் கூடாது போன்ற பயனற்ற கருத்துக்கள் எழுந்தன. அத்தகைய கருத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள கதை இது.
- உஷஸ்தி உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர், சிறந்த பண்டிதர். ஆனால் வறுமை காரணமாக அவர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனிடமிருந்து உணவைப் பெற நேர்ந்தது. அதிலும் அவன் உண்ட எச்சில் உணவை அவர் உண்ண நேர்ந்தது. அது மட்டுமல்ல, அந்த உணவையே ஒருநாள் வைத்து மறுநாளும் உண்கிறார் அவர். நாட்பட்ட உணவு தமோ குணத்தை வளர்ப்பது. எனவே தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவனிட மிருந்த உணவை ஏற்றது, எச்சில் உணவை உண்டது, நாட் பட்ட உணவை உண்டது என்று மூன்று குறைபாடுகள் உஷஸ்தியின் உணவு விஷயத்தில் நேர்ந்தன.
- ஆனால் வறுமையில் உயிர் போகின்ற நிலையில் ஒருவன் யாரிடமிருந்தும் எந்த உணவையும் உண்ணலாம். உஷஸ்தியும் உணவை மட்டும்தான் ஏற்றுக்கொண்டாரே தவிர தண்ணீரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அது வேறு இடங்களிலிருந்தும் பெறத்தக்கதாக இருந்தது. ஆயினும் உஷஸ்தியின் குறைகள் மன்னிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் ஒரு சாதகர் என்பதே. மற்றவர்களாக இருந்தால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்ற அளவிற்கு தண்டனை பெற்றிருப்பார்.
- உஷஸ்தி சாம பக்திகளை அவற்றிற்குரிய தேவதை களாகத் தியானம் செய்பவர். எனவே அவர் உணவு விஷயத்தில் தண்டனைக்குரிய தவறு செய்திருந்தும் யாக யஜ்ஞங்களில் கலந்து கொள்கின்ற அளவிற்கு மதிக்கப்பட்டார். எனவே இந்தக் கதை சாமபக்தி-தேவதை தியானத்தின் மகிமையைக் கூறுவதாக அமைந்துள்ளது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- கதையைத் தொடர்வோம்.........
- உணவினால் தெம்புற்ற உஷஸ்தி தாம் நினைத்தது போல் மன்னன் யாகம் நடத்துகின்ற இடத்தை அடைந்தார்.
- யாக மண்டபத்தில் உத்காத்ரு புரோகிதர்களின் இடத்தில் பாடுபவர்களின் அருகில் உஷஸ்தி அமர்ந்தார். பிறகு பிரஸ்தோத்ரு புரோகிதர்களிடம் கூறினார்.
- இந்தப் பகுதி சாம கானத்தின் மூன்று பக்திகளைப் பற்றிய தியானம். அவை பிரஸ்தாவம் உத்கீதம் மற்றும் பிரதிஹாரம். பிரஸ்தாவ பக்தியைப் பாடுபவர்கள் பிரஸ்தோத்ரு புரோகி தர்கள்; உத்கீத பக்தியைப் பாடுபவர்கள் உத்காத்ரு புரோகி தர்கள்; பிரதிஹார பக்தியைப் பாடுபவர்கள் பிரதிஹர்த்ரு புரோகிதர்கள்.'
- 'ஓ பிரஸ்தோதா, பிரஸ்தாவத்தின் தேவதையை அறியாமல் நீ பிரஸ்தாவத்தைப் பாடினால் உன் தலை வீழ்ந்துவிடும்',
- அவ்வாறே உஷஸ்தி உத்காதாவிடமும் கூறினார்: 'ஓ உத்காதா, உத்கீதத்தின் தேவதையை அறியாமல் நீ உத்கீதத்தைப் பாடினால் உனது தலை வீழ்ந்துவிடும்.
- இவ்வாறே உஷஸ்தி பிரதிஹர்த்தாவிடமும் கூறினார்: 'ஓ பிரதிஹர்த்தா, பிரதிஹாரத்தின் தேவதையை அறியாமல் நீ பிரதிஹாரத்தைப் பாடினால் உனது தலை வீழ்ந்துவிடும்.'
- உஷஸ்தி கூறியதைக் கேட்டதும் மூவரும் பாடாமல் மௌனமாக அமர்ந்துவிட்டனர்.
- ஒவ்வொரு பக்தியையும் அதன் தேவதையை அறிந்து பாட வேண்டும்
- ; அந்தத் தேவதையாகத் தியானம் செய்ய வேண்டும். ஆனால் இந்தப் பக்திகளைப் பாடுகின்ற மூவருக்கும், தாங்கள் பாடப்போகின்ற பக்தியின் தேவதை யார் என்பதே தெரிய வில்லை. தேவதையை அறியாமல் இசைக்கின்ற பாடல் அதன் பலனைத் தராது; யாகமும் நிறைவு பெற்றதாகாது.
- தாங்கள் செய்ய இருந்த தவறை உஷஸ்தி சுட்டிக் காட்டியதும் மூவரும் மௌனமாயினர்.
- கதை அடுத்தப் பகுதியிலும் அதாவது நாளை தொடர்கிறது.
- நன்றி
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }