![]() |
உணவு தியானம் - Food Meditation |
- வேத கால வாழ்க்கை பிரார்த்தனையை அடிப்படை யாகக் கொண்டதாக இருந்தது. உணவு, உடை போன்ற அன் . றாடத் தேவைகள், பாதுகாப்புத் தேவைகள் என்று அனைத் திற்கும் மனிதன் பிரார்த்தனையையே நாடினான். உணவிற்காகச் சூரியனை நோக்கி உத்கீதத்தைப் பாடுவது பற்றி இந்தப் பகுதி கூறுகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- நாய் ஒன்று இந்த உத்கீதத்தைப் பாட, அதனிடமிருந்து பகன் என்பவன் அந்த உத்கீதத்தைத் தெரிந்துகொள்வதாக இந்தப் பகுதி கூறுகிறது. பகனிடம் கருணை கொண்ட ஒரு தேவதையோ அல்லது ரிஷியோ நாயின் வடிவில் இந்த தியானத்தை அவனுக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்
- இனி, நாய்கள் பாடிய உத்கீதம்பற்றி பார்ப்போம். தல்பரின் மகனான பகன், மைத்ரேயன், கிலாவன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டான். அவன் ஒருமுறை வேதங்களைப் படிப்பதற்காகப் புறப்பட்டான்.
- பகனின் முன்னால் வெள்ளை நாய் ஒன்று தோன்றியது. மற்ற நாய்கள் அதனைச் சூழ்ந்துகொண்டு, 'நாங்கள் பசியுடன் இருக்கிறோம். எங்கள் உணவிற்காகப் பாடுங்கள்' என்று கேட்டுக்கொண்டன.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- மற்ற நாய்கள் கூறியதைக் கேட்ட வெள்ளை நாய் அவற்றிடம், ‘இதே இடத்தில் நாளை காலையில் என்னிடம் வாருங்கள்' என்று கூறியது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த தால்ப்யன், மைத்ரேயன், கிலாவன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற பகனும் மறுநாள் அந்த இடத்திற்கு வந்து காத்திருந்தான்.
- பசிக்கின்ற நாய்களுக்கு உடனே உணவளிப்பதற்கான முயற்சி செய்யாமல் மறுநாள் காலையில் வருமாறு வெள்ளை நாய் கூறியது. ஏன்? உயிர்களுக்கு உணவை அளிப்பவனாக' சூரிய தேவன் போற்றப்படுகிறான். சூரியனுக்கு ‘வாஜின:' என்ற பெயரும் உண்டு. 'வாஜம்' என்றால் உணவு; உணவை அளிப்பவன் ‘வாஜி'. சூரியன் ‘வாஜின:' என்று அழைக்கப்படு கிறான். எனவே உணவைப் பெறுவதற்குச் சூரியனைப் போற்ற வேண்டும். சூரியனைப் போற்றுவதற்கு உகந்த காலம் காலை வேளை. ஏனெனில் காலையில்தான் சூரியன் கிழக்கில் இருப்பான். மந்திர ஜபங்கள், பிரார்த்தனைகள் போன்றவை, குறிப்பாக சூரியனைக் குறித்த மந்திரங்களும் ஸ்தோத்ரங்களும் கிழக்கு நோக்கி செய்யப்பட வேண்டும்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- நாம் கிழக்கு நோக்கி நிற்கும் போது சூரியன் நமக்கு எதிரில் இருக்க வேண்டுமானால் அது காலை வேளையில் மட்டுமே சாத்தியம். எனவேதான் உணவிற்கான பிரார்த்தனைக்காகக் காலையில் வருமாறு வெள்ளை நாய் கூறியது.
- பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தைப் பாடும்போது எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே அந்த நாய்களும் செய்தன. ஒன்றையொன்று தொட்டபடி நடந்தவாறே பாடின. பிறகு அமர்ந்து ‘ஹிம்' என்று உச்சரித்தன.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- சாமவேதத்தைச் சேர்ந்தது பஹிஷ்பவமான ஸ்தோத்திரம். சோம ரசத்தைப் பிழியும்போது இது பாடப்படுகிறது. அத்வர்யு, பிரஸ்தோதா, உத்காதா, பிரதிஹர்த்தா, பிரம்மா, யாகத்தின் எஜமானர், பிரசஸ்தி ஆகியோர் ஒருவருடைய வேட்டியின் பின்கச்சத்தை அடுத்தவர் பிடித்தபடி வட்டமாகச் சுற்றிவந்து இதனைப் பாடுவார்கள். அந்த நாய்களும் ஒரு நாயின் வால் அடுத்த நாய்மீது படுமாறு வைத்துக் கொண்டு வட்டமாக நடந்தபடி பாடின. பிறகு எல்லாமாக அமர்ந்து ‘ஹிம்' என்று உச்சரித்தன.
- பிற்கால தந்திர சாஸ்திரங்களில் பீஜ மந்திரங்கள் என்று சில வார்த்தைகள் கூறப்படுகின்றன. பீஜ மந்திரங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை. ஐம், ஸ்ரீம் போன்றவை அவற்றுள் சில. 'ஐம்' கல்வியைத் தரும் மந்திரமாகவும், 'ஸ்ரீம்' செல்வத்தைத் தரும் மந்திரமாகவும் கூறப்படுகின்றன. அதுபோல் வேதங்களில் சில மந்திரங்கள் ஆற்றல் மிக்கவையாகக் கூறப்படுகின்றன. பூ:, புவ:, ஸுவ: ஆகிய வ்யாஹ்ருதி மந்திரங்கள் அவற்றுள் சில. அதுபோல் ‘ஹிம்' என்பது உணவைத் தருகின்ற ஆற்றல் பெற்ற மந்திரமாக இருக்கலாம்.
ஓம், நாம் உண்போம். ஓம், நாம் பருகுவோம். ஓம், ஒளிர்கின்ற தேவர்களான வருணனும் பிரஜாபதியும் சூரியனும் நமக்கு உணவைக் கொண்டுவரட்டும். உணவின் தலைவனான தேவனே, இங்கே உணவைக் கொண்டு வா; ஆம், இங்கே உணவைக் கொண்டு வா. ஓம்
வருணன் மழைக்குத் தலைவன். பிரஜாபதி உயிர்களைக் காப்பவன். ஸவிதா அனைவருக்கும் உணவளித்துக் காக்கின்ற சூரியன். எல்லா பெயர்களும் சூரியனைக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு எல்லோரும் சூரியனைப் போற்றி உணவைப் பெற்றார்கள் என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. .
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }