Type Here to Get Search Results !

Translate

அனைத்திற்கும் மேலான பரம்பொருள் தியானம் - பகுதி - 2 , தியான பயிற்சி

அனைத்திற்கும் மேலான பரம்பொருள் தியானம் - பகுதி - 2

தியான பயிற்சி - Meditation Class
தியான பயிற்சி - Meditation Class

 நேற்றைய பகுதியின் தொடர்ச்சி இது. அனைத்திற்கும் மேலான பரம்பொருளைப் பற்றிய தியானத்திற்கான முன்னுரையை நேற்றைய பகுதியில் கண்டோம். இனி, தியானப் பகுதி வருகிறது. 
பிரவாஹண ஜைவலியின் உபதேசம் தொடர்கிறது.

சாலாவத்யர்: 'இந்தப் பூமியின் ஆதாரம் என்ன?'

பிரவாஹண ஜைவலி: 'பரம்பொருள். பரம்பொருளிலிருந்தே எல்லா உயிர்களும் படைக்கப்படுகின்றன; பரம்பொருளிலேயே ஒடுங்கவும் செய்கின்றன. பரம்பொருளே அனைத்திலும் மிக மேலானவராகத் திகழ்கிறார். எனவே அவர்தான் அனைத்திற்கும் அறுதி ஆதாரம்.'

நண்பர்கள் மூவரின் கலந்துரையாடல் இந்த இடத்தில் நிறைவிற்கு வருகிறது. இந்த உரையாடல் சாம கீதத்தின், சரி யாகச் சொல்வதானால் உத்கீதத்தின் ஆதாரம் எது என்ற கேள்வியில் தொடங்கியது. உத்கீதத்தின் ஆதாரம் பரம்பொருள் என்று உரையாடல் நிறைவுறுகிறது. அனைத்திற்கும் மேலானவராக, அனைத்திலும் சிறந்தவராக இந்தப் பரம்பொருள் போற்றப்படுகிறார்.


 இங்கே பரம்பொருள் அல்லது இறைவன் என்பதற்கு 'ஆகாசம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகாசம் என்றால் பஞ்சபூதங்களில் ஒன்று. உபநிஷதங்களில் மிகச்சில இடங்களில் இந்தச் சொல் 'இறைவன்' என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இரண்டு வழிகளில் விளக்கலாம்:

1. ஆகாசம் எங்கும் பரந்திருப்பதுபோல் எங்கும் நிறைந்தவராக இருப்பதால் இறைவன் ஆகாசம் எனப்படுகிறார்.


ii. முழுவதும் ஒளிமயமாகத் திகழ்வதால்  ஆகாசம் என்ற வார்த்தை இறைவனுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளது.

உத்கீதத்தைப் பரம்பொருளாகத் தியானம் செய்வதன் பலன் என்ன?
மிக மேலானதாகவும் மிகச்சிறந்ததாகவும் போற்றப்படுவது உத்கீதம். அது எல்லையற்றது. இந்த உண்மைகளை உணர்ந்து உத்கீதத்தை யார் தியானிக்கிறானோ அவன் மிக மேலானவனாக, மிகச் சிறந்தவனாக ஆகிறான்; உயர் உலகங்களைப் பெறுகிறான்.

ஓங்காரம் இறைவனின் மிகவுயர்ந்த சின்னமாகப் போற்றப்படுகிறது. இங்கே, ஓங்கார மந்திரமே பரம் பொருள் என்ற ஐக்கியக் கருத்து கூறப்படுகிறது. மிக மேலானவரான, மிகச்சிறந்தவரான பரம்பொருளாக உத்கீதத்தை, சிறப்பாகச் சொல்வதானால், ஓங்காரத்தைத் தியானிப்பவன் வாழ்க்கையில் மிக மேலானவனாக, மிகச்சிறந்தவனாக ஆகிறான்; மரணத்திற்குப் பிறகு உயர் உலகங்களைப் பெறுகிறான்.

 சுனகரின் மகனான அதிதன்வர் இந்த மிக மேலான, மிகச்சிறந்த உத்கீத தியானத்தை உதரசாண்டில்யருக்கு உபதேசித்துவிட்டு கூறினார்: 'உனது பரம்பரையில் எதுவரை இந்த உத்கீத தியானம் உணர்ந்து செய்யப்படுகிறதோ அதுவரை அவர்கள் இந்த உலகில் மிக மேலான, மிகச்சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.'

உபநிஷதங்களுடைய உபதேச மகிமைகளுள் ஒன்று இது. ஒரு தியான முறையையோ, வேறு பயிற்சிகளையோ பற்றி உபதேசிக்கும்போது, 'இது வெறும் உபதேசம் மட்டுமல்ல; இதற்கு முன்பு, பலர் இந்தப் பயிற்சியைச் செய்து பலன் பெற்றிருக்கிறார்கள்' என்று அவர்களைப் பற்றிய தகவல்களும் தரப்படுவதைக் காணலாம். இது படிப்பவர் மனத்தில் நம்பிக்கையைத் திடப்படுத்துகிறது.

மரணத்திற்குப் பிறகு மேலுலகிலும் அவனது நிலை அவ்வாறே இருக்கும். உத்கீத தியானத்தைப் பற்றிய இந்த உண்மைகளை அறிந்து தியானிப்பவன் இந்த உலகின் மிக மேலான, மிகச்சிறந்த வாழ்க்கையைப் பெறுகிறான்; மேலுலகிலும் அத்தகைய நிலை யையே பெறுகிறான்; அத்தகைய நிலையையே பெறுகிறான்.

நன்றி
சிவயநம

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad