Type Here to Get Search Results !

Translate

பூர்வ புண்ணியம் என்றால் என்ன ?

பூர்வ புண்ணியம் என்றால் என்ன
பூர்வ புண்ணியம்
பூர்வ புண்ணியம்

 கேள்வி:
பூர்வ புண்ணியம் என்றால் என்ன?

பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன??? அதற்க்கான காரணம் என்ன? பரிகாரம் என்ன?? எவ்வாறு பூர்வ புண்ணியம் கெடுகிறது ??

பதில்:

சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் .

சுய ஜாதகத்தில் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய வீடுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது இந்த பூர்வ புண்ணியம் ஆகும் ,இந்த வீடு நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு சிறு வயது முதல் கிடைக்க வேண்டிய நன்மைகள் யாவும் சிறப்பான முறையில் தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும் .

குறிப்பாக ( குழந்தை பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் ,நல்ல அடிப்படை கல்வி ,தாய் தந்தையாருடன் வாழும் சூழ்நிலை ,அவர்களின் முழு அன்பும் ஆதரவும் கிடைக்க பெறுதல்)

என அடிப்படையில் நல்ல சூழ்நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக தொடரும் நிலை கிடைக்க பெரும் ஜாதகராக காணப்படுவர் ,தனது குல தெய்வத்தின் பரிபூரண அருள் ஜாதகருக்கு நிறைந்து எப்பொழுதும் ஜாதகரை காத்து நிற்கும் .

ஜாதகரின் பூர்விகம் எதுவோ அங்கிருந்தே ஜாதகருக்கு சகல யோகங்களையும் பெரும் அமைப்பு ,சமுதாயத்தில் மற்றவருக்கு முன் மாதிரியாக செயல்படும் தன்மை என ஜாதகர் நன்மையனைத்தும் அனுபவிக்க பூர்வபுண்ணியம் நிச்சயம் நன்றாக இருப்பது நன்மை தரும் .

மேலும் ஜாதகருக்கு நன்மக்களின் அறிமுகமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்க பெரும் பாக்கியம் ஜாதகருக்கு நிச்சயம் கிடைக்கும் ,தன விருத்தியும் ,துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கியே பயணம் செய்யும் காரணம் குல தெய்வத்தின் பரிபூரண கருணையே .

ஜாதகருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலேயே நல்லதொரு வாரிசு அமைப்பை பெரும் தன்மையும் குறைவு இல்லாமல் கிடைக்க பெறுவார் .அந்த குழந்தை பிறப்பின் மூலமாகவும் ஜாதகர் யோக வாழ்வினை பெறுவார் .

பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன?

சுய ஜாதகத்தில் பூர்விகம் பாதிப்படைந்து இருந்தால் ,ஜாதகர் அந்த வீட்டுக்குண்டான  தன்மையை விருத்தி செய்துகொள்ள நிச்சயம் வாயப்பு உண்டு .

அனால் கெட்டு விட்டது என்றால் ஜாதகரால் ஒன்றும் செய்ய இயலாது ,இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது சகல முன்னேற்றத்தையும் தரும் .

இந்த ஜாதகர் இதை தவிர்ப்பாரே ஆயின் நிச்சயம் ஜாதகரால் கஷடங்களை தாக்கு பிடிக்க முடியாது ,தனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகி விடும் .

பூர்விகம் கெடுவதற்கு முக்கிய காரணங்கள் :

ஜாதகரின் முன்னோர்கள் தம்மை நாடிவந்தவர்களை நிந்தனை செய்வதாலும் ,பெண்களை போக  பொருளாக நடத்தியதாலும் ,தனது மனைவியை கொடுமை செய்து மனம் நோக செய்ததாலும் ,பசுவை கொன்றதாலும் ,இளம் பெண்ணை மான பங்கம் செய்ததாலும் ,

மற்றவர் சொத்தை அபகரித்து கொண்டு அவர்களை மனம் நோக செய்ததாலும் ,மற்றவர் மரணத்திற்கு நேரடியாக மறைமுகமாக காரணமாக இருந்தாலும் ,சிவனடியார்களுக்கு அண்ணன் இடாத காரணத்தாலும் ,தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் ,தனது சுய நலத்துக்காக கருச்சிதைவு செய்ததாலும் ,தனது பெற்றோர்களை வயதான காலத்தில் பேணி பாதுகாக்கும் கடமையை செய்யாத காரணத்தினாலும் ,கோவில் சொத்தை அபகரித்து  காரணத்தினாலும் நிச்சயம் பூர்விகம் 100 சதவிகிதம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு .

பரிகாரம் :

தமது முன்னோர்கள் என்ன தவறை செய்தனரோ அந்த தவறுகளை தான் செய்யாமலும் ,அனைவரிடத்திலும் அன்பாகவும் ,தனது பெற்றோர்களையும் ,உடன் பிறப்புகளையும் அனுசரித்தும் ,அவர்களுக்கு தேவையனைவற்றை சந்தோசத்துடன் செய்து கொடுப்பதும் ,குறிப்பாக தனது மனைவிக்கு நல்ல கணவனாகவும் ,தனது குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் நடந்து கொண்டு ,தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வதும் ,தனது குல தெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்வதாலும் , தனது  வாரிசுகளுக்கும் ,பின்வரும் சந்ததியினருக்கும் 100 சதவீதம் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்க வழிவகுக்கும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad