வறுமையும் பிச்சைக்காரர்கள் ஆகும் நிலையும் யாருக்கு வரும் தெரியுமா?
சிலரது வாழ்க்கையில் நல்லதே நடக்காது, தரித்திரம் தாண்டவமாடும், அதிர்ஷ்டம் என்ற வார்த்தையின் அர்த்தம் கூட சிலருக்கு கிடைக்காது எல்லாம் கர்ம வினையும் ஜாதக நிலைதான். ஒருவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் தரித்திர யோகம் இருப்பதுதான்.
தர்மம் பண்ணுங்கம்மா என்று சிலர் கையேந்தி நிற்பார்கள். சிலரது தோற்றம் பார்க்கும் போதே பரிதாபத்தை வரவழைக்கும் குடும்ப சூழ்நிலையால் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். சிலரோ கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சிலரோ அழுக்கு உடையோடு தெரு ஓரங்களில் அசுத்தமான இடங்களில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் ஒருவரின் ஜாதக அமைப்பினால் ஏற்பட்டிருக்கும். யாருக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என்று பார்க்கலாம்.
சில நேரங்களில் ஒரு ராசியில் ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் கூடியிருக்கும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த கிரக அமைப்பு ஏற்பட்டது. இந்த கிரக சேர்க்கையின் போது சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. இந்த அமைப்பினால் உலகமே கடும் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பில் இருந்து இன்னமும் உலக மக்கள் விடுபடவில்லை. வசதியாக இருந்தவர்கள் கூட வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். பலரோ கால சூழ்நிலையை பயன்படுத்தி திடீர் என்று பணக்காரர்கள் ஆகிவிட்டனர். எல்லாம் கால நேரம்தான். யாருடைய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் பிச்சைக்காரர்கள் ஆகும் நிலை வரும் என்று பார்க்கலாம்.
தரித்திர நிலைமை
கையில் காசு இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அனுசரணையான மனைவி, குழந்தைகளால் பிரச்சினை ஏற்பட்டாலும் தரித்திர நிலைதான் வரும். குரு 8ஆம் வீட்டு அதிபதியாக இருந்து, ஜாதகத்தில் லக்கினாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் வலிமையின்றிக் கெட்டிருப்பதால் தரித்திர நிலையை ஏற்படுத்தும்.
கஷ்டமான நிலைமை
குரு, செவ்வாய், சனி, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் நீச்சம் பெற்று அல்லது அஸ்தமனமாகி 5,6,8,11,12ஆம் வீடுகளில் அம்ர்ந்திருக்கும் நிலைப்பாடு இந்த யோகத்தை உண்டாக்கும். குரு ஜாதகத்தில் 6 அல்லது 8ஆம் வீட்டில் இருந்து, குருவிற்கு அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருந்தால் பிரச்சினையும் சிக்கலும் வரும்.
பிச்சைக்காரர்கள் ஆகும் நிலை
ஒருவரின் ஜாதகத்தில் ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீச்சம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில், சாக்கடை ஓரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.
சாலையோரங்களில் வாழ்க்கை
அமாவாசை திதியில் பிறந்து சூரியன் சந்திரன் சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன் சனி கிரகங்கள் நீச்சம் பெற்றாலோ அழுக்கு நிறைந்த உடைகளுடன் பிச்சைக்காரராக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.
ஜோதிடம் ஏன் பலிக்காது
நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிதமாகாது.
அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன், சந்திரன்,குரு,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது.
வறுமையில் வாழும் நிலை
ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது. லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
கேது உடன் சேரும் கிரகம்
கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால் பலிதம் ஆகாது. கேதுவை நோக்கி எல்லா கிரகங்களும் சென்றுகொண்டே இருந்தால், என்னதான் யோகம் இருந்தாலும், கைகூடாமலே போகும்.
வசதியாக வாழ மாட்டார்கள்
மதி கெட்டு போய் விடுவார்கள்.யார் நல்லது சொன்னாலும் இவர்களின் புத்தியில் ஏறாது. இவர்களுக்கும் நல்ல வாக்கு, நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன், முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
பிரச்சினைகள் தீர வழி
அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன், சந்திரன்,குரு,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது. ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.