மாந்தி தோஷமும் - பரிகாரமும்
மாந்தி என்பது சனியின் உபகிரகம் ஆகும். இதை சனியை
சுற்றியிருக்கும் வட்டம் என்றும் கூறுவார்கள். இன்னும் சனியின்
புத்திரன் என்றும் கூறுவது துண்டு. இது சூரியன் இருக்கும் சார
நிலையை ஒட்டி உதிக்கும்.
இதற்கு ஒருபுராணக் கதையும் சொல்லுவதுண்டு
லங்காபுரீஸ்வரன் ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் தம் தவ
வலிமையால் நவக்கிரகங்களை எல்லாம் அடிமைப்படுத்தி
அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். நவக்கிரகங்கள்
சொல்லவொன்னாதுன்பத்திற்கு ஆளானார்கள் தேவர்களை
யெல்லாம். ஆட்டிப்படைத்தான் அது சமயம் அவனுடைய மனைவி
மண்டோதரி கர்ப்பமுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தில் இந்திர
ஜித் வளர்ந்து கொண்டிருந்தான். அது சமயம் நவக்கிரகங்கள்
எல்லாம் இரகசியமாக ஒன்று கூடி ராவணன் செய்யும் கொடுமையே
தாங்க முடியவில்லையே, அப்படியிருக்க அவனுக்கொரு ஆண் வாரிசு
பிறந்தால் அவன் என்ன அநியாயம் செய்வானோ? தெரியவில்லை
யே என்று 'பயந்து வயிற்றில் வளரும் ஆண்குழந்தைக்கு அற்ப
ஆயுளை நிர்ணயிக்க முடிவு செய்தனர். அதன படி அந்தப்
பொறுப்பை ஆயுள் காரகன் சனி பகவான் வசம் ஒப்படைத்தனர்.
சனி நேரடியாக ஆயுள் பங்கம் தரும் இடத்தில் இருந்தால்
இராவணன் கண்டுபிடித்து விடுவான் என்று யோசித்து
சனியினுடைய சக்திகளை வியர்வை அழுக்காக மாற்றி ஒரு
குளிகனாக (உருண்டை) செய்து அதை இந்திர ஜித்துவின் ஆயுள்
ஸ்தானத்தில் உட்காரச் செய்தார். அதன் படி இந்திர ஜித்துவின்
ஆயுளும் பாதியிலேயே முடிந்தது. ஆக இந்த மாந்தி
இந்திரஜித்துவின் ஆயுளை பங்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட
கிரகம். எனவே சனியுடன் இணையும்போது ஆயுள் தோஷங்களைச்
செய்வான் என்பது விதி.
விஞ்ஞான முறைப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, மெய்ஞான
முறைப்படி எடுத்துக் கொண்டாலும் சரி எது எப்படியிருந்த போதிலும்
மாந்தியின் செயல்பாடுகள் துக்கத்தையும், பிரோத தோஷத்தையும் ,
குடும்பதோஷத்தையுமே ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இந்த மாந்தி பாவக்கிரகங்களான சூரியன், சனி, ராகு , கேது
இவர்கள் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது அதிகமான
கெடுதல்களைச் செய்வான். சுபகிரகங்களின் நட்சத்திரங்களிலும் சுப
கிரகங்களின் வீடுகளிலும் சஞ்சரிக்கும் போது மிகுந்த கஷ்டங்களைத்
தராது. அதே சமயம் சுப கிரக நட்சத்திரம் பாவ கிரக வீட்டில் இருந்து
அதில் மாந்தி சஞ்சரித்தால் கெடுதல் தான் தரும். உதாரணமாக
திருவோண நட்சத்திரம் பூரட்டாதி 1,2,3 நட்சத்திரங்கள் சுபகிரக
நட்சத்திரங்களாக இருந்த போதிலும் அது சனி விட்டில் இருப்பதால்
கெடுதலான பலன்களைத் தான் தரும். புதன் நட்சத்திரங்களில் மாந்தி
இருக்கின்ற போது அதிக தொல்லையைக் கொடுக்காது. குரு
நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றபோது லக்கினத்திலிருந்து அது எந்த
வீடாக அமைந்தாலும் கெடுதல் செய்யாது. அதே போல் குருவால்
பார்க்கப்பட்டாலும் குருவுடன் இருந்தாலும் மாந்தி யாருக்கும் எந்த வித
கெடுதலும் செய்யாது . ஆக மாந்தியின் கெடுபலன்களை மாந்தி
இருக்கும் இடம் அதனுடன் சேர்ந்த பார்த்த கிரகங்களைக் கொண்டு
கவனமாகப் பலன்களை எடைபோடவேண்டும்.
உதாரணமாக 6,8,12 மிடங்களிலோ, பாதகஸ்தானங்களிலோ
சனியும் மாந்தியும் சேர்ந்து இருந்து அது சனி, செவ்வாய், சூரியன்
போன்ற பாவக் கிரக வீடாக இருந்தால் அவன் குடும்பத்தில்
மோட்சமடையாத பிரேத சாபம் உண்டு என்று உறுதியாகவே சொல்லாம்.
மாந்தி பிரேத சாபத்தைக்குறிக்கும் கிரகம். எனவே மாந்தியுடன்
இருக்கும் கிரகம், பார்க்கும் அல்லது பார்க்கப்படும் கிரகங்கள் இந்த
பிரேத சாபத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும்.
மாந்தியின் பொதுப்பலன்கள்
மாந்தி என்பது சனியின் உபகிரகம் இது ஒரு கொடிய
பாவக்கிரகம். மாந்தி இருக்கும் வீட்டில் கெடுபலன்களை
அதிகமாகக் செய்யும் மேலும் பாவக்கிரக வீட்டிலும்,
பாவக்கிரகங்களின் சாரங்களில் நிற்கும் போது கெடு பலன்களை
உறுதியாகச் செய்து விடும். சுபகிரகங்களின் வீடுகளிலும் சுபகிரக
நட்சத்திரத்திலும் நிற்கும் போது கெடுபலன்கள் குறையும் . குரு
பார்வை, சேர்க்கை இருந்தாலோ தோஷம் முற்றிலும் நீங்கிவிடும் குரு
வீட்டிலும் தோஷம் இருக்காது.
மாந்தியின் ஆஸ்ரய பலன்
மேஷம் -
மேஷம் என்பது தலைப்பகுதி. இங்குமாந்தி இருந்தால்
புத்தியைக் கெடுத்துவிடும் முன்பின் சிந்திக்காமல் எதையும் செய்து
விடுவான் முரட்டு சுபாபம் இருக்கும். தந்தை சொல்லைக் கேட்க
மாட்டான்.
ரிஷபம் -
இது முகப்பகுதி, அதிகம் கோபப்படுவான், பற்களை நறநற
என்று கடித்துக் கொண்டு கோபப்படுவான். இடது காது, இடது கண்
இவற்றில் கோளாறு இருக்கும் , எடக்காக பேசுவான்.
மிதுனம் -
சங்கீதம் வாத்தியம் போன்ற கலை பயில்பவர்களுக்கு இது
ஊக்கத்தைக் கொடுக்கும். அதில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
தொண்டைப்புண், உள்நாக்கு வளர்ச்சி போன்றவை ஏற்படும். மனத்
திறந்து பேசமாட்டான்.
கடகம் -
கடக மாந்தி கடன் தொல்யையை உண்டு பண்ணுவான்
ஒழுக்க மாக இருக்க முடியாது. சுத்தமாகவும் இருக்கமாட்டான்.
சொல்லுக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசமிருக்கும் . எதையும்
முழுமையாக தெரியாமலே தெரிந்தவன் போல் நடப்பான். போலி
மந்திரவாதி போலி சாமியார், போலி ஜோதிடர் ,போன்ற போலிகள்
இவர்கள் தாம்.
சிம்மம்
இருதய நோயையும் மூச்சுத் தினரலையும் கொடுக்கலாம்.
பெண்களான்்£ல் யோனி வியாதியைத் தரலாம். வயிற்றில் கோளாறு
் உபாதைகளைத் தரலாம். ஜாதகர் வீண் ஜம்பம் , விதண்டாவாதம்
பேசுபவராகவும் இருப்பார்.
கன்னி
நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கும். பசுத்தோல் போர்த்திய
புலி, குடும்ப பற்று இல்லாதவன் , மனைவியைத் துன்புறுத்தவான்.
படிப்புக்கும் தடை ஏற்படலாம்.
துலாம்
யாரையும் மதிக்க மாட்டான். வெட்டு ஒன்று துண்டு
இரண்டாகப் பேசுவான். நடத்தை கெட்ட பெண்களிடம் பழக்கம்
உள்ளவன். இவனது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் அதிகம் இருக்கும்.
இவரது ராசியின் சின்னமே தராசு தான் இவரை நம்பி
எந்தக்காரியத்திலும் இறங்க முடியாது.
விருட்சிகம்
இங்கு மாந்தி இருக்கப் பிறந்தவர்களுக்கு வியாதி, கடன்,
எதிர்த்தொல்லை போன்ற கஷ்டங்களால் வாழ்கைப் போராட்டம்
இருந்து கொண்டேயிருக்கும். வீண் கர்வம் ஏற்படும் . அதனால்
பலரது கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
தனுசு
இது குரு வீடு இங்கு இருக்கும் மாந்தி யாருக்கும் கெடுதல்
செய்யாது.
மகரம் , கும்பம்
இது சனியின் வீடு, இங்கு மாந்தி இருக்கப் பிறந்தவர்களுக்கு
அதிகமான கஷ்டங்கள் ஏற்படும். பொருள் அழிவு, செய்வினைக்கு
உட்படுதல், நச்சுத் தொழில்களைச் செய்தல், தனது ஆசையைத்
தீர்த்துக் கொள்ள எதை வேண்டுமானலும் செய்தல், மனைவியிடம்
கூட உண்மையை மறைத்தல், தண்ணீர், நெருப்பு இவற்றால் ஆபத்து,
வாகன விபத்து, வழக்கு ஏற்படும் . கெட்ட வழி சம்பாத்தியமும் வீண்
செலவும் ஏற்படும்.
மீனம்
இது குரு வீடு. இங்கு மாந்திக்கு தோஷமில்லை. வெளி நாடு
சென்று தொழில் செய்யவும். , பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு
ஏற்படும்.பெண்களால் பல சிக்கல்களும் ஏற்படும்.
மாந்தியின் திருஷ்டி பலன்கள்
மாந்தி தான் இருக்கும் வீட்டிலிருந்து 2,7,12ம் இடங்களைப்
பார்க்கும். மாந்தியினால் பார்க்கப்படும் வீடு நசிந்துவிடும். ஆனால்
அந்த வீட்டை வியாழன், சுக்கிரன் , புதன், வளர்பிறை சந்திரன் ஆகிய
சுபர்ககள் பார்த்தால் மாந்தியினால் ஏற்படும் தோஷம் நீங்கிவிடும்.
பாதிக்காது.
மாந்தியின் பாவ பலன்கள்
லக்கினத்தில் மாந்தி
1.உடல் நலம், மனவளம் பாதிக்கப்படும்.
2.முக விகாரத்தை ஏற்படுத்தும்.
3.பிறந்த வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
4.பெண்கள் ஜாதகமானால் பிரசவ காலத்தில் பிரச்சினை தரும்.
2 ல் மாந்தி
1.படிப்பைக் கெடுத்து விடும்.
2.கண், காது, இவற்றல் அடிக்கடி நோய் ஏற்படும்.
3.குடும்பத்தில் ஜாதகர் நல்ல பெயர் வாங்கமுடியாது.
4.2மிடத்தில் பாவ மத்தியில் மாந்தி இருந்தால் அவனுக்கு கெட்ட
வழிகள் மூலம் (கடத்தல், திருட்டு, மதுபானம், சட்டவிரோத .
தொழில் ) தனலாபம் ஏற்படும்.
3 ல் மாந்தி
1. 3 ல் மாந்தி அவ்வளவாக கெடுதல் இல்லை,
2.முதல் திரேகாணத்தில் மாந்தி இருந்தால் - உடல்
நலக்குறைபாடும்
2ம் திரோகாணத்தில் மாந்தி இருந்தால் - நடத்தைக்
கோளாறும்
3ம் திரோகணாத்தில் மாந்தி இருந்தால் - வாழ்வில் காரிய
தடைகளும் ஏற்படும்.
3. 3 மிடம் சுக்கிரன் வீடாக இருந்தால் சங்கீதம், நடிப்பு, நாட்டிய
போன்றவற்றில் அதிக ஆர்வத்தையும் வெற்றியையும் தரும்.
4 ல் மாந்தி
1. இது ஆகாது. எல்லா விதத்திலும் கெடுதலை தரும்.
2. சுக ஜீவனம் (நல்ல தொழில்) நடத்த முடியாது.
3. குடியிருப்பு சரியாக அமையாது. மனை தோஷம் ஏற்படும்.
4. வீட்டில் தெய்வம் வாசம் செய்யாது.
5. அடிக்கடி மருத்துவ செலவோ வழக்கு செலவோ ஏற்படும்.
6. சரியான தூக்கம் இருக்காது.
7. அவர்களுடைய நடத்தை ஒரு மர்மமாக இருக்கும்.
8. குடும்பம், சமூக அந்தஸ்து, உத்தியோகம் ஆகியவற்றைப்
பாதிக்கும். .
9. இந்த 4மிடம் சனி வீடாக இருந்தாலோ அல்லது சனி சேர்க்கை
ஏற்பட்டாலோ பாதிப்பு மிகக்கடுமையானதாக இருக்கும்.
5 ல் மாந்தி
1. இது குடும்பத்திலுள்ள பிரேத சாபத்தையோ, தெய்வ
கோபத்தையோ குறிக்கும்.
2. 5மிடம் சுபகிரக வீடாக (புதன், சுக்கிரன், சந்திரன்) வீடாக
இருந்து அதில் மாந்தி இருக்க, அதை குரு பார்க்குமானால்
அவனுக்கு தெய்வீக உள்ளளுணர்வு பரிபூர்ணமாக இருக்கும்.,
நாளை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொள்வான்.
3. 5மிடம் குரு வீடாக வந்து அதில் மாந்தி இருந்தால் அவனுக்கு
தெய்வ தரிசனம் கிடைக்கும். குருமார்கள், ரிஷிகள் ஆசி கிடைக்கும்.
4. பெண்கள் ஜாதகத்தில் 5ல் மாந்தி இருப்பது நல்லதல்ல. இது
கர்ப்ப சிதைவையும், பிரசவத்தில் பிரச்சினையும் ஏற்படுத்தும்.
5. 5ல் இருக்கும் மாந்தியை சனி பார்க்குமானால். அவள்
கன்னித்தாய் ஆவாள்.
6. 5ல் மாந்தி + கேது சேர்ந்து இருக்க அதை .சனி
பார்க்குமானால் அவளுக்கு குழந்தைகள் இறந்து பிறக்கும்.
7. 5மிடம் சனி வீடாக வந்து அதில் மாந்தியுடன் ராகு, செவ்வாய்
தொடர்பு இருக்குமானால், ஆண், பெண் குறியில் தீராத
வியாதி இருக்கும்.
6ல் மாந்தி
6ம் பாவத்தில் மாந்தி இருப்பது சத்துருக்களால் ஏற்படும்
தொல்லைகளையும் சத்ருக்களின் குணாதிசயங்களையும் காட்டும்.
1. பெண் ஜாதகத்தில் 6ல் மாந்தி இருந்தால் எதிரிகளின்
நிர்பந்தத்தினால் கன்னித் தன்மையையோ கற்பையோ
இழக்ககூடும்.
2. 6மிடம் குருவீடாக இருந்து அதில் மாந்தி இருக்குமானால்
அவள் நெருப்பாக மாறி கெட்ட எண்ணத்துடன் அவளை
அனுகுபவர்களை சுட்டெறித்துவிடுவாள்.
3. 6மிடத்தில் மாந்தியுடன் குரு இருக்குமானால் பெரிய படிப்பு
நல்ல அரசு உத்தியோகம், அவனது சகிப்புத்தன்மை,
விடாமுய்ற்சி இவற்றில் நல்ல உயர்வைத் தரும்.
4. 6மிடத்தில் இருக்கும் மாந்தியை சனி, செவ்வாய், பார்த்தால்
அவர்கள் எதிலும் முறை கேடாக நடந்து கொள்வார்கள்.
ஆனால் 4, 5 மிடங்கள் நன்றாக அமைந்துவிட்டால் ஒழுக்கமாக
நடந்து கொள் வார்கள்.
5. 6ல் மாந்தி + கேது இணைந்து இருந்தால் பிறரது
முன்னே ற்றத்தைக் கண்டு அதிகம் பொறாமைப் படுவார்கள்.
6. 6மிடம் சுக்கிரன் வீடாக இருந்து அதில் மாந்தி மட்டும்
இருந்தால் அவர்கள் ஹோட்டல், சினிமா, ஜவுளி, அலங்காரப்
பொருட்கள் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.
7ல் மாந்தி
1. 7ல் மாந்தி ஆண் - பெண் யாராக இருந்தாலும் மண
வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும்.
2. 7ல் உள்ள மாந்தியை சனி பார்த்தால் திருட்டு, கடத்தல்,
கருப்புச் சந்தை இவை மூலம் கொள்ளை கொள்ளையாக
பணம் சம்பாதிப்பார்கள் .
3. கூட்டாளிகளை ஏமாற்றி விடுவார்கள்.
4. . 7ல் மாந்தி இருக்க அத்துடன் 12மிட அதிபதி சேர்ந்து
“இருந்தால் அவ்ன் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில்
நிறைய சம்பாதிப்பான்.
5. பெண்கள் ஜாதகத்தில் 7 மிடத்தில் மாந்தி இருந்து அதற்கு 6
அல்லது 8 மிடத்தோன் சேர்க்கை பார்வை இருந்தாலும் அவள்
கணவன் வீட்டின் கொடுமை தாங்காமல் உயிரை மாய்த்துக்
கொள்வாள் அல்லது கொல்லப்படுவாள்.
8ல் மாந்தி
. 1. 8ல் மாந்தி இருப்பது ஒரு விதத்தில் நல்லது. இன்னொரு
விதத்தில் கெட்டது .
நன்மை
1. புதையல், லாட்டரி, பேரம், ஊக வாணிபம் போன்ற வகையில்
நல்ல லாபம் கிடைக்கும்.
2. உமழைப்பில்லாமல் எப்படியும். பணம் சம்பாதிப்பார்கள்.
3. லஞ்சம் வாங்குவதும், பணத்தை மறைத்து வைப்பதும்
இவர்களுக்கு கைவந்த கலை.
தீமை-
1. 8 மிடத்தில் மாந்தி இருந்து அத்துடன் ராகு கேதுக்களோ,
பலமற்ற சந்திரனோ இருந்தால் அந்த ஜாதகனுக்கு துர்மரணம்
நிச்சயம். அப்படிப் பட்ட சந்திரன் ஆரோ கணத்தில் இருந்தால்
இயற்கையின் கோரத்தினாலும் அவரோகணத்தில் இருந்தால்
உயரத்திலிருந்து ஏதேனும் பொருள் தலையில் விழுவதாலும்
மரணம் உண்டாகும்.
2. 8மிடத்தில் பெண்கள் ஜாதகத்தில் மாந்தி இருப்பது கணவனது
ஆயுளுக்கு பங்கம் தரும்.
9ல் மாந்தி
9மிடத்தில் மாந்தியுடன் இருக்கும் கிரகத்தின்
குணாதிசயங்களைப் பொறுத்தான் தோஷத்தின் தன்மை
வெளிப்படும்.
1. 9ல் மாந்தி இருப்பது போன ஜென்மத்தில் செய்த
தோஷங்களைக் குறிக்கும்.
2. 9ல் மாந்தி + சுக்கிரன் இருந்தால் அவன் முன் ஜென்மத்தில்
ஒரு பெண்ணைக் கெடுத்துவிட , அவள் தற்கொலை செய்து
கொண்டதால் அந்த தோஷம் இவனைப் பற்றிக் கொண்டது.
3. 9ல் மாந்தி + சந்திரன் இருந்தால் தெய்வ தோஷம் ஆகும்.
4. 9ல் மாந்தி + செவ்வாய் இருந்தால் வேலைக்காரக்ளை
கொன்ற தோஷம் ஆகும்.
5. 9ல் மாந்தி + புதன் இருந்தால் குருவின் சாபம் ஆகும்.
6. 9ல் மாந்தி + குரு இருந்தால் பிராமண தோஷம் ஆகும்.
7. 9ல் மாந்தி + சனி இருந்தால் நீச்ச ஸ்திரி சாபம் ஆகும்.
8. 9மிடத்தில் மாந்தி + குரு இருந்து அது சுபகிரக வீடானால்
அவர்கள் கடவுளிடத்தும் பிராமணரிடத்திலும் பத்தி
உள்ளவர்களாகவும் தான தர்மங்கள் செய்பவர்களாகவும்
இருப்பார்கள். நல்ல பெயர், கெளரவப் பதவிகள் ஏற்படும்.
10ல் மாந்தி
1. தொழிலில் வருமானம், நல்ல பெயர், புகழ் உண்டாகும்.
2. 10ல் இருக்கும் மாந்தியை சூரியனும் சனியும் ஒன்றாகப்
பார்க்குமானால் அப்படிப்பட்ட ஜாதகன் ஆதியில் ராஜாவாக
இருந்தால் கூட தெருத்தெருவாக அலைந்து பிச்சை எடுப்பான்
என்பது சாஸ்திரம்.
3. பிள்ளைகளின் ஜாதகத்தில் 10மிடத்தில் மாந்தி இருந்தால்.
அந்த வீட்டின் கிரகத்தின் திசை நடக்குமானால் அப்போது
தந்தைக்கு மரணம் ஏற்படும்.
4. 10மிடத்தில் சந்திரனும் மாந்தியும் இருக்க, அதை சுக்கிரன்
பார்க்குமானால் அந்தக் குழந்தையின் .தாய் அதை பெற்ற
உடனேயே இவ்வுலகை விட்டுப் போய்விடுவாள்.
5. 10மிடத்தில் மாந்தியுடன் 11மிட அதிப்தி இருக்குமானால் அந்த
ஜாதகனுக்கு எதிர்பாராத வகையில். தனலாபம் ஏற்படும்.
6. 10ல் மாந்தி இருக்க அது சனி வீடானால் அவர்கள் அடிக்கடி
தொழிலை மாற்றி கொண்டேயிருப்பார்கள்.
11ல் மாந்தி
1. 11ல் மாந்தி - இது எல்லா வகையிலும் நன்மை
2. 11ல் சூரியன் + மாந்தி - பூர்வீக சொத்து கிடைக்கும்.
3. 11ல் சூரியன் + செவ்வாய் 4 மாந்தி சுய முயற்சியினால்
வாழ்க்கையில் வெகு முன்னேற்றம் அடைவார்கள்.
4. 11ல் புதன் + மாந்தி - வாணிபம் , தொழில் பிறருக்கு சேவை
செய்வதன் மூலம் தனலாபம் ஏற்படும்.
5. 11ல் குரு + மாந்தி - அரசாங்கத்திலோ, நீதிமன்றங்களிலோ
பெரிய பதவியை வகிப்பார்கள்.
6. 11ல் சுக்கிரன் + மாந்தி - ஸ்திரி மூலம் லாபம் ஏற்படும்.
7. 11ல் மாந்தி 4 சனி - துணிச்சலுடன் கொலைப்பாதகங்கள்
மூலம் பிறரை ஏமாற்றுவதன் மூலம் தனலபாங்களை அடைந்து
கெட்ட வழிகளில் செலவு செய்து சிறை வாசம்
அனுபவிப்பார்கள்.
8. 11ல் மாந்தி + கேது - பூர்வ ஞானம் உண்டாகும் , பிறரை எடை
போடுவதில் வல்லுநர்கள்.
12 ல் மாந்தி
1. வியாதி, கெட்ட பழக்கம், பூர்வ ஜென்ம நன்மை தீமைகளைக்
குறிக்கும்.
2. 12ல் மாந்தி + லக்கினாதிபதி இருந்தால் அந்த ஜாதகர் 44
வயதில் கொல்லப்படுவார். அல்லது தூக்கிலிடப்படுவார்.
3. 12ல் மாந்தி, 2ல் சனி இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க
இந்த மூன்றையும் குரு பார்க்காவிட்டால் அந்த ஜாதகன்
பலரை கொலை செய்வான்.
4. 12மிடத்தில் இருக்கும் மாந்தியுடன் 2மிடத்தோன் சுபகிரகமாக
இருந்து 5 பாகைக்கு மேல் வித்தியாசத்தில் இருக்குமானால்
அப்படிப்பட்ட ஜாதகன் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அதில்
லாபம் கிடைக்கும். அவன் குடும்பம் ஏதாவது ஒரு
காரணத்திற்காக பிரபலம் அடைந்ததாக இருக்கும்.
5. 12ல் இருக்கும் மாந்தி 3மிடத்தோனான செவ்வாய் அல்லது
சனியுடன் இருக்குமானால் அந்த ஜாதகன் எப்படிப்பட்ட
அபாயகரமான செயலையும் .அல்லது நாச வேலையையும்
செய்வதற்கு அஞ்சமாட்டான்.
6. 12ல் இருக்கும் மாந்தியுடன் 4மிடத்தோன் சேர்ந்து அது
சுபகிரகமாக இருந்தால் அவர்களுக்கு எதிர்பாராத வகையில்
பரம்பரை சொத்து கிடைக்கும். அது பாவக்கிரகமாக
இருந்தால் அவர்கள் தாயாரின் நிலை மர்மமானதாகவும்
பரிதாபகரமானதாகவும் இருக்கும்.
7. 12ல் இருக்கும் மாந்தியுடன் 5 மாதி சேர்ந்து அது சுபரானால்
அவர்களுக்கு தெய்வ அனுகூலம், வாக்கு சித்தி, தெய்வ அருள்
போன்றவை கிடைக்கும். அது பாவகிரகமானால் சுப
காரியங்களில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
புத்திரர்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும் , புத்திர தோஷமும்
ஏற்படும்.
8. 12ல் இருக்கும் மாந்தியின் 6மாதி சேர்ந்தால் ஸ்திரி தோஷம்,
ஸ்திரி சாபம் ஏற்படும்.
9. 12ல் இருக்கும் மாந்தியுடன். 7மாதி சேர்ந்தால் அவர்கள்
வெளிநாட்டில் உள்ளவர்களை அல்லது பிற, சாதி மதத்தினரை
திருமணம் செய்யக்கூடும். அது மட்டுமல்ல அவர்களுக்கு
வெளிநாட்டிலிருந்து விசேஷசொத்துக்களும் தன லாபங்களும்
கிடைக்கும்.
10. 12ல் இருக்கும் மாந்தியுடன் 8மாதி சேர்ந்தால் அவர்கள்
குடும்பத்திற்கு. பிறர் செய்வினையால் தோஷம் உண்டாகும்.
11. 12ல் இருக்கும் மாந்தியுடன் 9,10, 11மிட அதிபதிகள் சேர்ந்தால்
அதிக கெடுதல் இல்லை, ஓரளவு நன்மை தரும்.
மாந்தி தோஷ நிர்ணயத்தில் முக்கிய கவனிப்பு
1. மாந்தி எந்த வீட்டில் இருக்கிறதோ. அந்த வீட்டுக்குறிய கிரகம்
அந்த ஜாதகருக்கு பாதகாதிபதி ஆகிறான்.
2. மாந்தி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திர
சாரத்தில் வேறு கிரகங்கள் இருக்குமானால் அவை சுப
கிரகங்களாக இருந்தால் கூட அசுபகிரகங்களாக மாறி
விடுவார்கள். கெடு பலன்களையே செய்வார்கள்.
3. மாந்தி தோஷம் நிர்ணயிக்கும் போது மற்ற கிரகங்களின்
சேர்க்கை, பார்வை, மாந்தி இருக்கும் வீடு, மற்ற கிரகங்களின்
பலம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் பலன்
கூற வேண்டும். இதெல்லாம் கவனிக்காமல் மாந்தியை மட்டும்
வைத்து பலன் சொல்லுவது ஆபத்தானது.
12 மாந்தி பரிகாரங்கள்
4. மாந்தி பரிகாரங்களில் மணி, மந்திரம், ஒளஷதம் ஆகிய
வகைகளும் சிறப்பான பலன் தரும்.
மாந்திக்குறிய இரத்தினக்கல்
- மஞ்சள் புஷ்பராகம்
மாந்திக்குறிய மந்திரம்
- சனீஸ்வரஸ்தவரசும்
தீசரகனால் எழுதப்பட்ட சனி
ஸ்தோத்திரமும்
மாந்திக்குறிய ஒளஷதம்
- ஆயுர்வேத மருந்துகளும், யுனானி மற்றும் சித்த
வைத்தியங்களும்.
மாந்திக்குறிய ஹோமம்
- ம்ருத்யுஞ்சய ஹோமம்,
சுதர்ஸன ஹோமம் (வீட்டில்
செய்ய நன்மை)
நவக்கிரகங்களின் அதிதேவதை - பிரத்யதி தேவதை
நவக்கிரகம் அதிதேவதை பிரத்யதி தேவதை
1. சூரியன் அக்னி ருத்திரன்
2, சந்திரன் ஜலம் கெளரி
3. செவ்வாய் பூமி க்ஷேத்திரபாலன்
4. புதன் விஷ்ணு நாராயணன்
5. குரு இந்திரன் ப்ரம்மா
6. சுக்கிரன் இந்திராணி இந்திரன்
7 சனி ப்ரஜாபதி யமன்
8. இராகு சர்ப்பம் நிருதி
9. கேது ப்ரம்மன் சித்ரகுப்தன்