குடும்ப தோஷம்
![]() |
குடும்ப தோஷம் |
ஒரு ஜாதகத்தில் 2மிடம் குடும்ப ஸ்தானம் ஒருவருக்கு
அமையும் குடும்ப நிலை முன். குடும்பதோஷம் எப்போது
ஏற்படும்;
1. 2ல் ராகு 8ல் கேது இருந்தால் குடும்பதோஷம்
2. 2 ல் மாந்தி இருந்தால் குடும்பதோஷம்
3. 2ல் ஒரு நீசக்கிரகம் இருந்தால் குடும்தோஷம்.
4. 2ல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் கிரக
யுத்தத்தில் இருந்தால் குடும்பதோஷம்.
5. 2ல் செவ்வாய் நின்றார் குடும்ப தோஷம்
6. 2ல் சனி + செவ்,
சூரிய+சனி,
சூரிய+செவ்,
சனி+ராகு,
சூரியன் +சுக்கிரன்,
சூரியன்+ராகு ,
சந்திரன்+கேது,
சந்திரன் * சனி ,
போன்ற கிரக சேர்க்கைகள் இருந்தால்
குடும்ப தோஷம் ஆகும்.
இதன் பலன்
ஜாதகர் காலகாலத்தில் திருமணம் செய்து, குழந்தைகளைப்
பெற்றெடுத்து, பெற்றோர்களுடன் சந்தோஷமாக வாழ்வது இயலாத
ஒன்றாகிவிடும், திருமண தடை, புத்திர தடை, குடும்ப உறுப்பினர்கள்
பிரிவு, குடும்பத்தில் கலகம், ஒற்றுமையின்மை, சிலருக்கு குடும்பமே
இல்லாமல் கூட இருக்கும். இப்படி குடும்ப வளர்ச்சி இல்லாமல்
போய்விடும். இது ஒரு கெட்ட தோஷம். ஜாதகருக்கு மகிழ்ச்சி என்பது
கனவாகிவிடும் விரக்தியும் வீண் விரையமும் ஏற்படும். குடும்பத்தை
விட்டு வெளியேறிவாழும் நிலை ஏற்படும்.
பரிகாரம்
1.ஜாதகத்தில் 2மிடத்திற்கு குரு பார்வை இருந்து விட்டால்
தோஷம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
2.முதலில் குலதெய்வதற்கு முறைப்படி பூஜைபோட்டு வழிபாடு
செய்யவேண்டும்.
3.குடும்பத்து நபர்களுக்கு வஸ்திரதானம் செய்யவேண்டும்
அவர்களுடன் வீண் வாதங்களைத் தவிர்க்கவேண்டும்.
4. 2மிடத்தில் எந்த பாவகிரகம் தோஷம் ஏற்படுத்தியதோ அந்தக்
கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகாரங்களைச்
செய்யவேண்டும்.
இந்த பரிகாரம் முக்கியம்
ஒரு நாள் குடும்ப நபர்களுடன் புனித தீர்த்தம் உள்ள இடத்திற்கு சென்று (அழகர்கோவில் ராமேஸ்வரம், பான தீர்த்தம், காவிரி கங்கை போன்ற புண்ணியநதிகள் ) அங்கு நீராடி தீர்த்ததை ஒரு புனித குடத்தில் வீட்டுக்கு எடுத்து வரவும். உங்களுக்கு தாராபலம் உள்ள ஒரு
நாளைக்குதேர்ந்தெடுத்து உங்கள் வீட்டில் உறவினர்களையும் அழைத்து, இரண்டு உத்தம பிராமணர்களைக் கொண்டு சிவபூஜை அல்லது சுப்ரமணிய ஜெபம் ஹோமம் செய்து பிராமணர்களுக்கு அன்னதானமும் வஸ்திரதானமும் செய்து அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்று, அதன் பின் உங்கள் குடும்பத்தாருடன் உறவினர்களும் சேர்ந்து சண்டை சச்சரவின்றி மகிழ்ச்சியாக வீட்டில் விருந்து சாப்பிட்டு பெரியோர்களுக்கு வஸ்திரதானம்செய்து அவர்கள் காலில் விழுந்து வணங்கவும், அவர்களிடம் ஆசி பெறவும்., பின் ஒரு குறையில்லா பசுவை (கோதானம்) உத்தம
பிராமணர்களுக்கோ கோயிலுக்கோ தானம் செய்யவும். இந்த பரிகாரத்தால் தோஷங்கள் நிவர்த்தியாகி உங்கள் குடும்பம் செழித்தோங்கும். இது மிக முக்கியம்.