Type Here to Get Search Results !

Translate

இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்


இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்


நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரதில் அனைத்தையும் இழந்து விடுகிறோம். நாம் இழந்தை மீட்க முடியாது என எண்ணி அதை விட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.


பரிகாரங்கள்


 வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டினால் இழந்த புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.


தேய்பிறை அஷ;டமியன்று பைரவரை வழிபாடு செய்யதால் இழந்த செல்வத்தை பெற முடியும். நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.


 திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். தேவி லட்சுமியை வணங்கியதால் இழந்தை பெற்றார். ஆகவே லட்சுமியை வணங்கினால் இழந்த செல்வத்தை பெறலாம். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.


 பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.


குபேர மந்திரம்

ஓம் யக்ஷய குபேராய 
வைஸ்ரவணாய 
தநதா நியாதி பதயே 
தந்தாந்ய ஸம்ருத்திம்மே 
தேவி தாபய ஸ்வாஹா

என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து வழிபட வேண்டும்.

தினமும் நம் வீட்டில் இறைவனை வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வழிப்பட்டால் இழந்த செல்வத்தை பெறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad