பித்ரு தோஷ பரிகாரங்கள்
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும், கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.
பரிகாரங்கள்
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்.
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரமாகும்.
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று
ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம் சஹசிவ சூரியாய! வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா
என்று சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும். இந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசை அல்லது, ஏதேனும் ஒரு அமாவாசை தினத்தில், 108 முறை ஜெபித்து வந்தால் பித்ரு சாபம் அகலும்.