Type Here to Get Search Results !

Translate

ஏகாதசியின் முக்கியத்துவம் என்ன?

ஏகாதசியின் முக்கியத்துவம் என்ன?

 ஏகாதசியின் முக்கியத்துவம் என்ன?


ஏகாதசி விரதத்தைக் குறித்து கேள்விப் படாதவர்கள் மிகக் குறைவு. கடைபிடிக்க இயலாதவர்களும் இதன் முக்கியத்துவத்தை அறியாதவர்களில்லை.

ஏகாதசி விரதத்தின் நன்மைகளை நவீன சாஸ்திரமும் விளக்கியுள்ளது.

விரதங்களில் மிக மேன்மையானதுவே ஏகாதசி விரதம் என்பதால் இதைக் கடைபிடிக்க அனேகம் பக்தர்கள் தயாராகுகின்றனர். நாகங்களில் சேஷனும், பறவைகளில் கருடனும், தேவர்களில் விஷ்ணுவும், மனிதரில் பிராமணணும் எப்படியோ அவ்வாறே விரதங்களில் ஏகாதசி விரதம் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவானே தெளிவாக்கியுள்ளனர். எல்லா பாவங்களும் அழிக்கின்ற விரதம் எதுவென்று கேட்டால் யாரும் தயக்கமின்றி பதிலளிப்பது ஏகாதசி விரதம் என்று

"ஏகாதசேந்திரியை பாபம்,
இயத்கிருதம் பவதிப்ரபோ
ஏகாதசோபவாசன
யத்சர்வம் விலயம் பிரஜேத்"

"

என்று ஏகாதசிவிரதத்தைப் பற்றி நாரத புராணம் கூறுகின்றது. மேலும், பத்ம புராணம், விஷ்ணு புராணம், பவிஷோத்தரபுராணம், பாகவதம், காகபாகவதம், ருக்மாங்கசரிதம், அம்பரீட்ச சரிதம் முதலிய புராணங்களில் எல்லாமே ஏகாதசி விரதத்தின் மகிமையை விவரித்துள்ளன.

இந்தநாளில் இறை சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும் என்பது விதி. மனதில் பூரணமாக இறை சிந்தனை நிலைநிறுத்த வேண்டு மென்பதே உபவாசம் என்பது. கடமைக்காக பட்டினியாக இருப்பதல்ல உண்மையான விரதம். மாதத்தின் இரண்டு ஏகாதசி நாளும் முழு உபவாசமும் இரண்டு ஷஷ்டி நாளில் ஒருவேளையும் உபவாசித்தால் மனது சுத்தமாகி, இறை ஆசியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த ஏகாதசி விரதத்தினால் உடலுக்குண்டாகும் பயன்களை விஞ்ஞானமும் மிகச் சிறப்பாகவே கருதுகின்றது. ஜீரண அமைப்பையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய உபவாசம் மிகச் சிறந்த வழி என்பதே நவீனவாதம். மிகையாக உண்பவர்களுடைய பெரூகுடல் மற்றும் சிறுகுடல் எப்போதும் நிரம்பியிருக்கும். உபவாசத்தினால் இவை முற்றிலும் சுத்தமாகும் என்பது ஓர் முக்கிய உண்மை. மேலும் ஜீரண உறுப்புக்களுக்கு சரியான இளைப்பாறுதலும் கிடைக்கும் இதனால் இரத்தமும் சுத்தமாக்கப்படும் என்பதால் இரத்தத்திலடங்கியிருக்கும் மிகையான யூரிய, கொழுப்பு, உப்புக்கள் முதலியவையும் அகற்றப்படும்.

இவ்வாறு ஏகாதசி விரதத்தினால் நாம்டையும் பயன்கள் ஏராளம் என்பதைக் காணலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad