சொரியாசிஸ் குணமாக
காளாஞ்சகப் படை என்று சொல்லக்கூடிய சொரியாசிஸ் தோல் நோய்க்கு தவிர்க்க வேண்டிய உணவுகளும், கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகளும்:
தோல் சம்பந்தப்பட்ட சோரியாசிஸ் போன்ற கொடுமையான நோய்களுக்கு மருந்துகளை உட்கொள்ளும் முன்பு குடல் சுத்தி அவசியம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நாட்டு மருந்து கடையில் முருக்கன் மாத்திரை அல்லது ராஜபேதி மாத்திரை பயன்படுத்தி குடல் சுத்தி கட்டாயம் செய்ய வேண்டும்.
குடல் சுத்தி செய்து முடித்த பிறகு இரத்த சுத்தி செய்ய வேண்டும் இரத்த சுத்தி செய்வதற்கான முறை யாதெனில், *நான்கு டம்ளர் தண்ணீரில் 2 கிராம் அளவு அவுரி இலை பொடியும் அதனுடன் ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லும் பத்து மிளகும் சிறிது சீரகமும் சேர்த்து ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு கொதிக்க வைத்து இதை தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர இரத்தம் சுத்தப்படும்.*
பாதிப்படைந்தவர்கள் சருமத்திற்கு வெப்பாலை தைலத்தை பயன்படுத்துவது நல்லது.
மேலும் சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் தலையில் செதில் செதிலாக தோல் உரிந்து வருதல் போன்று இருந்தால் வாரம் இருமுறை தலை குளியல் மேற்கொள்ளும் பொழுது *SKM ல் பஞ்ச கற்ப குளியல் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேங்காய் பாலிலோ அல்லது நாட்டுப் பசும் பாலிலோ கலந்து* தலையின் சருமம் முழுவதும் நன்கு பூசி ஊறவைத்து *இளம் வெந்நீரில்* தலை குளித்து வரலாம்.
தீராத அரிப்பும் உடல் முழுவதும் நமச்சலும் உள்ளவர்கள் *புளியங்காய் மரத்தின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அதைத் தண்ணீரில் போட்டு சிறிது சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து* இந்த கஷாயத்தை தினம்தோறும் பருகிவர அரிப்பு நமச்சல் குணமாகும்.
சொரியாசிஸ் உடையவர்கள் இரவில் வெகு நேரம் கண் விழித்தலாகாது. இரவு கண்விழிக்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்*. இரவு நேரத்தில் சீக்கிரமாக தூங்கும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
அசைவ உணவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,* டீ காபி, வெள்ளை சர்க்கரை, புளி மற்றும் புளி சார்ந்த புளியோதரை போன்ற உணவுகள், கடுகு கத்தரிக்காய், அகத்திக்கீரை, கடலை மற்றும் கடலை எண்ணெய், பூசணிக்காய் மற்றும் பாகற்காய் இவற்றை தவிர்ப்பது நலம்*