Type Here to Get Search Results !

Translate

சிவனடியார் அகநிலை இலக்கணம்.

சிவனடியார் அகநிலை இலக்கணம்.

சிவனடியார் அகநிலை இலக்கணம்.

1. சிவனுக்கு யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவன் சிவனடியார்.

2. தனக்கு உகந்ததை சிவனுக்கு படைத்து மகிழ்பவன் சிவனடியார்.

3. சிவனுக்கு உகந்ததை தானும் உகந்து மகிழ்பவன் சிவனடியார்.

4. அண்டசராசரத்தை படைத்து அதில் இன்புற வாழ, என்னையும் படைத்தான் என்பதை இன்புறும் போதெல்லாம் மறவாது நினைப்பவன் சிவனடியார்.

5. சிவபெருமான் மட்டுமே தனக்கு வேண்டியதை கொடுக்க வல்லவன் என்பதை உணர்ந்து வாழ்பவன் சிவனடியார்.

6. சிவனிடம் தான் பெற்றதை பிறருக்கு கொடுத்து மகிழ்பவன் சிவனடியார்.

7. பிறருக்கு தான் கொடுத்ததை, சிவன் கொடுத்ததே என்று எண்ணி அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்பாராது இருப்பவன் சிவனடியார்.

8. துன்பங்களும், நோய்களும் தன்னை சூழ்ந்த வினைகளை போக்க வந்தவை என்று உணர்ந்து அனுபவித்து வினைகளை கழற்ற வல்லவன் சிவனடியார்.

9. தனக்கு துன்பம் தரும் காரணிகள் யாவும், பிறரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தன்னாலே வரவழைக்கப்பட்டது என்று உணர்பவன் சிவனடியார்.

10. தான் இன்புற தடைஏதும் விதிக்காதவன் சிவன் என நம்புபவன் சிவனடியார்.

11. இன்புறலும், துன்புறலும் தன் ஆன்மாவை சிவனடிக்கு இழுத்து சொல்லும் இரட்டை மாடுகள் என உணர்ந்து ஒவ்வொரு அனுபவத்திலும் தன் வினை கழன்று போவதை அறிந்து நொடிக்கு நொடி அதிகரிக்கும் ஆனந்தத்தொடு வாழ்பவன் சிவனடியார்.

12. தானே சிவமாக சிவானந்த பேரின்பத்தில் மூழ்கி இருந்தாலும் சிவனொருவன் மட்டுமே எல்லாம் வல்லவன் என்பதை மறவாது இருப்பவன் சிவனடியார்.

13. தன்னால் ஆக வேண்டியது என சிவனார் பணித்த தன் பிரபஞ்ச கடன் மட்டுமே தன்னாலாகும் என உணர்ந்து நடப்பவன் சிவனடியார்.

14. சிவனை நாட, தடை ஏதும் சொல்லாதிருப்பவன் சிவனடியார்.

15. சிவனால் ஆகும் பிரபஞ்ச செயல்களை பார்த்து, ரசித்து மகிழ்பவன் சிவனடியார்.

16. தனக்கென ஒரு பிரபஞ்ச கடனை தந்து, தன் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டானே அந்த சிவன் என எண்ணி அளித்த பிறவியை வியந்து போற்றி வாழ்பவன் சிவனடியார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad