குத்து விளக்கில எத்தனை திரிகள் பொருத்திபற்றவைக்க வேண்டும்?
'ஏகவர்த்திம்மஹா வியாதிர்
துவிவர்திஸ்து மஹாத்தனம்
த்ரிவர்த்திர் தரித்ரதா,
பஞ்சவர்த்திஸ்து பத்திரம் ஸ்யா
துவி வர்த்திஸ்து சுசோபனம்'
வர்த்தி என்றால் திரி என்று பொருள்.
மாலை நேரம் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வற்காகப் பற்றவைக்கும் குத்து விளக்கின் திரியைப் பற்றியே மேலே கொடுத்திருக்கும் மந்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
விளக்கில் எத்தனை திரிகள் இருந்தால் என்னவென்று புதிய தலை முறை வினவலாம். ஆனால் இதற்கு பதில் கூறுமுன் பல விஷயங்களை விவரிக்க வேண்டியதாயிருக்கும்.
ஒரு திரி மட்டும் பொருத்தி விளக்கேற்றினால் வயதானவர்கள் கோபப் படுவார்கள் ஒற்றைத்திரி நோயின் அடையாளம் என்பார்கள். மூன்று திரியில் விளக்கேற்றினால் அது அலட்சிய த்தின் லட்சணம் என்றும் நான்கு திரியானால் தரித்திரம் என்றும் அறிவுள்ளவர்கள் கூறுவார்கள். இரண்டு திரியைப் பொருத்தி விளக்கேற்றினால் மிக நன்று. கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமானால் உத்தமம். இதை விட ஐந்து திரிகள் இடுவது மிக உசிதமானது என்றெல்லாம் ஆசாரியர்கள் விதித்துள்ளனர்.
திரிகள் எத்தனையானாலும் ஒளியில் வேறுபாடுண்டாகும் என்பதல்லாமல் வேறென்ன உண்டு என்ற கேள்விக்கு பதில் கூறுவது மிகவும் சிக்கலானது.
'டௌசிங்ராட்' என்ற சிறு கருவியால் சோதனைகள் செய்து இது சம்பந்தமான சில உண்மைகள் விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது.
ஒருதிரி மட்டும் பொருத்தி எரியவிட்ட விளக்கிலி ருந்து எதிர்மறை சக்தி பரவுகின்றது என்று தெரிகின்றது. இரு திரிகளால் எரியும் விளக்கில் கண்டது அனுகூலமான சக்தி. மூன்று, நான்கு திரிகளால் எரியும் விளக்கிலிருந்தும் எதிர்மறை சக்தியே வெளிப்பட்டது. ஐந்து திரிகள் பொருத்திய விளக்கிலும் அனுகூல சக்தி காணப்பட்டது.
இந்த விஞ்ஞான ரகசியத்தைப் புரிந்து கொண்டுதான் இரண்டு அல்லது ஐந்து திரிகளிட்டு விளக்கேற்ற வேண்டும் என்று ஆசாரியர்கள் விதித்தனர்.