Type Here to Get Search Results !

Translate

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...

#அனுபவம்:- 1 
30 வயதிற்கு மேல் கட்டாயம் திருமணம் முடித்திருக்க வேண்டும், தாய் தந்தையின் உதவியை நாடியோ அல்லது மனைவி, உடன் பிறந்தோர், சொந்தக்காரர், போன்ற யாரிடமும் உங்கள் சொந்த செலவிற்காக நிற்க கூடாது, உங்களுக்கு என ஒரு வருமானம் தரும் தொழில், வேலையோ கட்டாயம் இருக்கவேண்டும், 30 வயதிற்கு மேல் நிலையான வருமானம் வேலையும் இல்லையென்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள், அது உங்களை மேலும் துன்பப்படச்செய்யும்...

#அனுபவம்:- 2
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் வயசு போனால் திரும்ப வராது, கூடவே மகிழ்ச்சியும் போய்விடும், 40 வயதிற்குள் உலகம் வேண்டாம், நம்ம இந்தியாவிற்குள்... நீங்கள் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும், மனைவி மக்களுடன் சென்றால் இன்னும் ஆனந்தமே... புது புது இடம், இனம், மக்கள், மொழி, என புதிய கலாச்சாரம் உங்களை ஆச்சரியப்பட செய்யும், இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்...

#அனுபவம்:- 3
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 40 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும், இங்கே யாருதான் பிடித்த வேலையை செய்கிறார்கள் என்கிறீர்களா? நாம் செய்யும் வேலையில் ஒரு நேர்மை, ஒரு நியாயம், இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

#அனுபவம்:- 4
தோல்வி!
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள அனுபவமின்றி தவிக்கும் நிலை ஏற்படலாம்...

#அனுபவம்:- 5
முதலீடு!
சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை கொண்டு கூட வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும், அல்லது யாருக்கும் தெரியாமல் வங்கியில் சேர்த்து வைப்பதும், நல்லது நீங்கள் பணம் சேமிக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தால் அதற்கு என ஏதாவது செலவு புதிதாக முளைக்கும் அதனால்தான் வருமானத்தின் கால் பங்கை சேமித்து வைப்பின்... அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்கு உதவிடும்...

#அனுபவம்:-6
30 வயதிற்குள் நேர்மையான மற்றும் உண்மையான நட்பை தக்க வைத்துக்கொள்ளுங்க,
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் உங்களுக்கு தோள் கொடுக்க ஓரு தோழமை வேண்டும், 40 வயது வரை உங்களுக்கு நண்பர்களே இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் வேற வழியே இல்லை...

#அனுபவம்:- 7
பிடிக்காவிடில் பிரிவு!
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

#அனுபவம்:- 8
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

#அனுபவம்:- 9
கைதேர்ந்தவர்!
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும், அதில்தான் உங்களின் (கெத்து) மதிப்பு அடங்கியிருக்கிறது...

#அனுபவம்:- 10
நீங்கள் நீங்களாகவே இருங்கள்! 30 வயது வரை எப்படி இருந்தீரோ! 40 வயதிலும் அப்படியே இரும்... இந்த சமூகம் உங்களை நன்கு கவனிக்க கூடியது, மற்றவர்களுக்காக, அல்லது பணத்திற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால், இருக்கும் மரியாதையும் போகுமே தவிர உங்களுக்காக யாரும் சிலை வைக்க போவதில்லை, ஆதலால் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

"நிச்சயமாக துன்பத்தில்தான் இன்பம் இருக்கிறது, பிரச்சினையையும், துன்பமும் உங்களுக்கு மட்டுமல்ல... மேற்கூறிய யாவும் 30 வயதிலிருந்து 40 வயதிற்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய உங்கள் வாழ்க்கையின் கட்டாயமாகும், பணம் மட்டுமே சந்தோஷத்தை ஒருநாளும் கொடுக்காது, பணத்தால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட நாளும் நிலைக்காது, நாம் செய்யும் செயலும், நமது குடும்பமும், சுற்றும் சுற்றியுள்ள நட்பும், ஆகச்சிறந்த நமக்கு வேண்டிய மகிழ்ச்சியை இவைகளும் கொடுக்கும்."


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad