கோயில் வாசலுக்கு நேராக நின்று தொழுவது ஏன் ஒழுங்கில்லாதது?
கோயிலில் வழிபாடுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீ கோயிலுக்கு நேராக வாசலில் நின்று வணங்குவதை பெரியோர்கள் கண்டிப்பதுண்டு. அனேக கோயில்களில் இதைத் தவிர்க்கவே வேலிகட்டி அடைத்துள்ளது காணலாம். வாசலுக்கு நேராக நிற்காமல் இடது பக்கம் அல்லது வலதுபக்கம் தள்ளி நின்று சுமார் முப்பது டிக்ரி சரிந்து நின்று வணங்க வேண்டும்.
விக்கிரகத்தில் குடி கொள்ளும் காந்தக் கதிர்கள் அதாவது ஜீவசக்தி பக்தரை நோக்கி பாம்பு வடிவத்தில் வந்து கொண்டிருக்கும். இந்நேரம் கை, கால்கள் சேர்ந்து, இருகைகளும் தாமரை மொட்டு போல் பிடித்து கண்களைடைத்து தியானிக்க வேண்டும் என்பது ஆசாரியவிதி. அப்படி செய்யும் போது ஒன்றுக் கொன்று தொடும் விரல்கள் வழியாக மூளையின் ஜீவ சக்தி அதி வேகத்தில்உடல் முழுவதும் பரவும்.
இவ்வாறு உயிர் சக்தி பரவும் வழி ஆசாரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பூமிசக்தி சிறுவிரல் வழியாக, ஜலசக்தி மோதிர விரல் வழியும் அக்னி சக்தி நடுவிரல் வழியாகவும், வாயு சக்தி ஆள்காட்டி விரல் வழியாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் உருவாகின்றன. பூமி சக்தி உடல் பலமும் ஜலசக்தி உயிர் பலமும், அக்னிசக்தி மனோ பலமும், வாயுசக்தி உணர்வு பலமும் ஆகாய சக்தி ஆத்ம பலமும் வழங்குகின்றது.