படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?
நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிரினங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அன்றாட உலக வாழ்க்கை -யின் இன்னல்களிலிருந்து விடுபட்டு ஒரு நபர் ஆத்துமாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை என்று ஆசாரியர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
துக்கத்தை இழந்தவர்களைப் பொதுவாக துர் பாக்கியசாலிகள் என்று அழைப்பதுண்டு. அதிர்ஷ்டசாலிகள் நித்திரையின் ஆழத்தில் மூழ்கி எல்லாம் மறந்து துங்குகின்றனர். உணவும் துக்கமும் ஒன்றோடொன்று இணைந்ததென்பது நமது உறுதியான நம்பிக்கை.
துக்கத்தைக் குறித்து மட்டுமல்ல நமக்கு துரங்கி எழுவதற்கும் சில விதிமுறைகளுண்டு என்பதை உணரலாம்.
துக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தினசரி அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்று ஆசாரியர்கள் கூறியுள்ளனர். இந்த வேளையில் தூங்கினால் உடல் நிலை) குன்றும் என்றும், சோர்வும் தரித்திரமும் உருவாகும்என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து வலது பக்கம் திரும்பி எழ வேண்டும். விழித்த உடன் படுக்கை யிலிருந்து குதித்தெழுந்து ஒடுவது தவறு.
. விழித்த உடன் இருகைகளையும் மலர விரித்து அதைப்பார்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌரி என்ற தேவிமாரை தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.
*கராக்ரோ சதே லட்சுமி,
கரமத்யே சரஸ்வதி
கரமூலே ஸ்திதா கௌரி
பிரபாதே கரதர்சனம்'*
தூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக்குறைவான சக்தியே பயன்படுத்துகின்றது. திடீரென குதித்தெழுந்து செல்லும் போது இருதயம் மிகக்கடினமாகச் செயல்படவேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத்துடிப்பை அதிகரித்து நிலைதடுமாறச் செய்கின்றது. அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்பித்துள்ளனர். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது. க்கும் போது மின் யன்ப
அது மட்டுமல்ல, இருதய நோயாளிகளில் இருபத்திமூன்று சதவீதமும் படுக்கையிலிருந்து எழும்பும் போது நிகழ்ந்த விபத்தினால் நோயுற்றனர் என்பது புள்ளி விவரம்.