பலிக் கல்லில் மிதிப்பது தீமையா?
கோயில் தரிசனம் நடத்தும் போது பலிக்கல்லில் மிதிக்காமல் பார்த்துக் கொள்வது பக்தரின் கடமை கோயில் சாஸ்திரத்தின் முக்கிய பாகமாகும் பலிக்கற்கள். அவற்றில் தெரியாமல் மிதிக்க வாய்ப்புக்கள் ஏராளமுண்டு. அப்படி நிகழ்ந்துவிட்டால் எக்காரணத்தாலும் அதைத் தொட்டு வணங்கக்கூடாதென்பது ஆசாரிய விதி. பலிக்கல்லில் மிதிப்பது மிகப்பெரிய தவறுதான். ஆனாலும் அதை மறுபடியும் கையால் தொட்டு தலையில் வைப்பது அதைவிடப் பெரிய தவறும் பாவமுமாகும் தெரியாமல்பலிக்கல்லில் மிதித்துவிட்டால் கீழே கொடுத்திருக்கும் மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்கவும்.
கரம் சரணகிருதம் வாக்காயஜம் கர்ம்மஜம்
வாஸ்ரவணநயனஜம் வா மானசம் வாபராதம்
விகித மிகிதம் வாசர்வமேல் தல்க்ஷமஸ்ய
சிவ சிவ கருணாப்தோ ஸ்ரீ மகாதேவ சம்போ
இந்த மந்திரம் ஜெபித்தால் தெரியாமல் செய்த அபராதம் நீங்கும். திவ்ய சக்தியின் உணர்ச்சிகளின் சின்னங்களே ஸ்ரீ கோயிலுக்கு சுற்றும் பதிக்கப்பட்டிருக்கும் பலிக்கற்கள் என்பது நம்பிக்கை. ஒரு கல்லிலி-ருந்து சக்தி அடுத்த பலிக்கல்லுக்கு கடந்து கொண்டிருக்கும். தேவவிக்கிரகத்தைச் வாறு சுற்றிக் கொண்டிருக்கும் சக்தி துண்டித்து-ப்போதல் ஒரு போதும் நேரிடக்கூடாது. ஆனால் நடைபாதையில் பக்தர்கள் நடக்கலாம். ஏனென்றால் நடைபாதை வழியாக திவ்ய சக்தியின் ஒழுக்கு நிரந்தரமாகப் புறம் நோக்கி பரவிக் கொண்டிருக்-கின்றது.