குளிர் காலங்களில் நாம் கிணற்று நீரில் குளிக்கலாகுமா?
குளிர் காலத்தில் கிணற்று நீரிலும் வெயில் காலத்தில் நதியிலும் குளிக்க வேண்டும் என்பது விதி. இரண்டு வகையான குளியலைக் குறிப்பிட்டிருந்தும் நம் பிரதேசத்தில் பலரும் தினமும் இருமுறை குளிப்பதற்கும் தயங்குவதில்லை. ஒவ்வொரு நாளும் தொடங்கும் போதும் கடைசியில் படுக்கைக்கு செல்லும் முன்னும் குளிப்பது வழக்கமாயிருந்தது.
குளிர் காலத்தில் நதிகளிலுள்ள நீருடன் ஒப்பிடும் போது கிணற்று நீர் குளிர் குறைந்ததாக இருப்பதனால் குளிர்காலத்தில் கிணற்று நீரில்குளிக்க வேண்டும் என்று மெதுவாகச் சூடாகுவதும், மெதுவாகக் குளிர்வதும் நீரின் தன்மை. நீர் மெதுவாக ஆவியாகும் போது குளிர் கூடுதலாயிருக்கும். பெரிய பாத்திரங்களிலும் நதிகளிலும் நீர் விரைவில் ஆவியாகும். வாயுமண்டலத்தை நீர் மேல் பரப்பு சார்ந்திருப்பதால் ஆவியாதல் விரைவில் நிகழ்கின்றது. ஆவியாதலுக்கு வேண்டிய வெப்பம் நீரிலிருந்து எடுத்துக்கொள்வதால் நீர் அதிக குளிரடைகின்றது.
ஆனால் குளிர் காலத்தில் வெப்பநிலை ஆவியாதலும் குறைவாக நிகழ்கின்றது.
ஆவியாதல் குறைவானதால் கிணற்று நீரிலிருந்து சிறிது வெப்பமே நஷ்டமாகின்றது. நீர் மேல் பரப்பு வாயு மண்டலத்தை சார்ந்திருக்கும் நதிகளில் நீர் அதிக குளிருள்ளதாயிருக்கும்.