Type Here to Get Search Results !

Translate

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன் ?


 குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன் ?


திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டு மென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணியவேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள் ளாவது இகழும் இக்காலத்தில், இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது, மிகவும் அவசியம். நாம் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்.

அதிகாலையில் எழுந்து கை, கால், முகம் கழுவி, திருநீர்ச்ட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும் பின் மாறிடத்தும், இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்வதை சிலராவது பார்த்திருப்போம், மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை, கால் கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு. ஆனால் குளித்த பின் திருநீர் எடுத்து
நனைத்து உடலில் பூசிவந்தனர்.

இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின், நம் உடலில் காலையிலும் மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதைக் கவனிப்போம். இரவு ஒரு நபர்தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது, அதே போல் மாலை நேரத்தில் சுற்றுச்சூடிலில் எண்ணற்ற நோயணுக்கள் உலவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு. அதனால் காலையும் மாலையும் நோயணுக்களின் பாதிப்பு ஏற்படாம லிருக்க ஈரமில்லாத திரு நீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் முட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாக கொழுப்பு அதிகரிக்கவும் அது முட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு. இப்படி உருவாகும் நீர்க்கட்டை தவிர்ப்பதற்காகத்தான் குளித்த உடன் ஈரமான திரு நீர் அணிவது.,

திருநீர் அணியும் போது சொல்வதற்காக ஆசாரியர்கள் மந்திரமும் விதித்திருக்கின்றனர்.

'ஓம் அக்னிரிதி பஸ்மஜலநிதி பஸ்ம
ஸ்தல மிதி பஸ்ம வ்யோமேதி பஸ்ம
சர்வம் ஹவா இதம் பஸ்மே
மன ஏதானி ச க்ஷம் ஷிபஸ்ம்'.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad