Type Here to Get Search Results !

Translate

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி இருக்கு?

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி இருக்கு

 

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி இருக்கு

நவகிரகங்களில் சுக்கிரன் சுப கிரகம் ஆவார். களத்திரகாரகனான சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றால், ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால், என்னென்ன பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் :

மேஷ ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு 7-ம் இடமாகவும் இருந்தால், இல்லற வாழ்க்கையில் சிறு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து மற்றவர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம் :


ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு ஆகும். அன்பும் நல்ல பண்புகளும் கொண்ட வாழ்க்கைத்துணை அமைந்து, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். எந்த இடத்தில் இருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம் :

மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவராகவும் இருப்பார்கள்.

கடகம் :

கடகத்தில் சுக்கிரன் இருந்தால் ஒரு செயலை ரூடவ்டுபாட்டுடன் செய்பவர்களாக இருப்பார்கள். இவருடைய நல்ல பண்புகள் பலராலும் பாராட்டப்படும்.

சிம்மம் :

சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் வாழ்க்கைத்துணையால் சகல விதங்களிலும் நன்மை ஏற்படும். இவர்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

கன்னி :

கன்னி சுக்கிரனின் நீச்ச வீடு என்பதால், சுக்கிரனால் எந்த ஒரு நன்மையும் ஜாதகருக்கு ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். சுக்கிரன் நீச்சபங்கம் பெற்றிருந்தால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

துலாம் :

துலாம் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். சுக்கிரன் ஜாதகருக்கு அனைத்து விதமான சுகபோகங்களையும் தருவார். இந்த ஜாதகரால் வாழ்க்கைத் துணைக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


விருச்சிகம் :

சுக்கிரன் விருச்சிகத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே அமையும். சுபகிரக பார்வை பெற்றிருந்தால் அசுப பலன்களின் தாக்கம் குறையும்.

தனுசு :

தனுசு ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் தலைமைப் பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள். கலை இலக்கியங்களில் படைப்பாளியாகவும் திகழ்வர். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

மகரம் :

மகரத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு மனதிடம் அதிகரிக்கும். இவர்கள் இன்பம், துன்பம் எது வந்தாலும் சமமாக நினைத்து, கலக்கம் கொள்ளாமல் இருப்பார்கள்.

கும்பம் :

இது சனியின் வீடு என்பதால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும். இவர்களுடைய எண்ணங்கள் எதிர்மறையாகவே இருக்கும். விரைவில் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவர்கள்.

மீனம் :

மீனத்தில் உச்சம் பெற்று அமைந்திருக்கும் சுக்கிரன், ஜாதகருக்கும் அனைத்து விதமான நன்மைகளை தருவார். எல்லா வகைகளிலும் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad