நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க சித்த மருத்துவம்
இரத்த ஓட்டம் சீராக இருக்க பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும்.
இரத்த ஓட்டம் சீராக
இரத்த ஓட்டம் சீராக அரிவாள்மனைப் பூண்டுபொடி காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர இரத்த ஓட்டம் சீராகும்.
இரத்த ஓட்டத்தில் உண்டாகும் தடை காரணமாக உடல் உறுப்புகள் மறத்துப் போதல் இரத்த ஓட்டம் சீராக தூதுவளைக் கீரை, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட இரத்த ஓட்டம் சீராகும்.
சீரான ரத்த ஓட்டத்திற்கு
இரத்த ஓட்டம் சீராக ஓரிதழ் தாமரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.
சீராகாத ரத்த ஓட்டத்தை சரி செய்ய
இரத்த ஓட்டம் சீராக தூதுவளைக் கீரை, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட இரத்த ஓட்டம் சீராகும்.
இரத்த ஓட்டம் தடை படுதல்
இரத்த ஓட்டம் சீராகவும்,நுரை திரை விலகவும் ஓரிதழ் தாமரை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர 6 மாதத்தில் குணம் காணலாம்.
இரத்தக்கட்டு குறைய
இரத்தக்கட்டு குறைய சோற்றுக் கற்றாழையை சிற்றாமணக்கு எண்ணெயில் காய்ச்சி பின்பு அதனுடன் வெங்காயச்சாறு, பனங்கற்கண்டு இரண்டையும் சேர்த்து பிசைந்து குழம்பாக்கி அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெயை சேர்த்து மீண்டும் பாகு வரும் வரை காய்ச்சி இரண்டு வேளை கொடுத்து வந்தால் அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக்கட்டு குறைய
இரத்தக்கட்டு குறைய மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரியபவளம், நெல், காசுக்கட்டி ஆகியவற்றை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பிறகு பாத்திரத்தில் போட்டு நெருப்பின் மேல் வைத்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதை எடுத்து பற்று போட்டு வந்தால் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக்கட்டு குறைய
இரத்தக்கட்டு குறைய எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் கரியபவளம் சேர்த்து கொதிக்க வைத்து பற்று போட்டு வந்தால் இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக் கட்டு குறைய
இரத்தக் கட்டு குறைய மஞ்சள், நெல் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்துப் பற்றுப் போட இரத்தக்கட்டு குறையும்.\
இரத்தக்கட்டு குறைய
இரத்தக்கட்டு குறைய சுண்ணாம்பு, பனைவெல்லம் இவைகளை மைப்போல் அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக்கட்டு குறைய
இரத்தக்கட்டு குறைய எலுமிச்சைப் பழச் சாறு, கற்றாழை இரண்டையும் இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக்கட்டு குறைய
புளி, உப்பு , மஞ்சள் மூன்றையும் அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் பற்று போட இரத்தக்கட்டு குறையும்.
இரத்தக்கட்டு கரைவதற்கு
இரத்தக்கட்டு கரைவதற்கு படிகாரம், செம்மண் சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு மைப்போல் அரைத்துப் பற்றுப் போடக் குணம் தரும்.
வீக்கம், இரத்தக்கட்டு
புளி, உப்பு இவைகளை கரைத்து கொதிக்க வைத்து ஆரிய பின் பற்றுப்போட வீக்கம், ரத்தக்கட்டு குணமாகும்.