சிவபூஜா விதிமுறைகள்
சூதமுனிவர் சொல்லலானார். பூஜா பாத்திரத்திலிருக்கும் ஜலத்தால் இலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். மகாபிஷேகம் செய்யும் பொழுது சேகரித்து அருகே வைத்துள்ள வேறு நன்னீராலும் அபிஷேகிக்கலாம் முன் அத்தியாயத்தில் சொல்லிய மந்திரம் சொல்லமுடியாவிட்டால் (யதோக்த்ரூபிணம் ஸம்பும் சிவமாவாஹயாம்யஹம்) மேற்கூறிய முறைப்படியே சிவபெருமானை ஆவாஹனம் செய்கிறேனென்று இலங்கிமூர்த்தத்தில் சிவபெருமான் இருப்பதாகப் பாவித்து விதிப்படி உபசாரங்கள் செய்ய வேண்டும். முன் சொல்லிய தோத்திரத்தைக் கூறி ஆசனங் கொடுக்க வேண்டும். சிவாய நம சொல்லி ÷ஷாட ச உபசாரங்களைச் செய்ய வேண்டும். அப்படியே கூறி சர்வவியாபியான பெருமானுக்குப் பாத்யம் ஆசமனங் கொடுத்து வேதமந்திரங்களால் பஞ்சாமிர்தமும் தான் விரும்பிய பழங்களும் அத்தர் பனிநீர் சந்தன முதலிய பரிமள திரவியங்களும் சுத்த ஜலமும் அபிஷேகித்து, தான் கையெட்டுந் தூரத்திலிருந்து சந்தனாபிஷேகஞ் செய்து ஆயிரத்தெட்டு அல்லது நூற்றெட்டுத் தாரைகளையுடைய ஜல பூரணகும்பத்தை மேலே கட்டி வேத மந்திரங்களாலாவது ஆறு மந்திரங்களோடு கூடிய ருத்திரஸுக்த மந்திரத்தாலாவது ஏகாதச ருத்திர மந்திரத்தாலாவது தன்னால் கூடியவரையில் அபிஷேகித்து வஸ்திரத்தால் ஒத்தி, ஆசமநியம் (உட்கொள்ளல் நீர்) கொடுத்து ஆடை தரிக்கச் செய்து! யஜ்ஞோபவீதமும் (பூணூல்) சமர்ப்பித்து. சந்தனம் வெள்ளை யக்ஷதை இவற்றையிட்டு (திலாஸ்சைவ யவாவாபி கோதூமா மாஷகாஸ்ததா, அர்ப்பணீமா-ஸிவாயைவமந்த்ரைர் நாநாவிதைரபி(14) என்ற படி அக்ஷதையாக எள்ளாயினும் எவையாயினும் கோதுமையாயினும் உளுந்தாயினும் தரிக்கலாம். எள் பாபத்தைப் போக்கு மென்றும்யவை (கோதுமையில் ஒருவகை) அன்னபாக்கியமும் கோதுமை தேகபுஷ்டியும் மாஷம்(உளுந்து) வம்சவிருத்தியுஞ் செய்யும் என்பார்கள்-பிரணவரத் நமோந் தகமாகிய சிவமந்திரத்தால் தாமரை, கொன்றை ஆத்தி, மல்லிகை ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கரூவூமத்தை துளசி இலை போன்ற தனக்குக் கிடைத்த புஷ்பங்களையோ அல்லது பத்திரங்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
வீட்டிலிருக்கும் சரலிங்கத்தையாவது அசரலிங்கத்தையாவது தானும் சன்னிதானத்தில் இருக்கும் பரார்த்த லிங்கத்தை ஆதிசைவரைக் கொண்டும் மேற்சொன்னவாறு பூஜை செய்த பிறகு பரிமளம் பொருந்திய குங்கிலியம், அகர், சந்தனத்தூள், சாம்பிராணி முதலியவற்றைத் தூபமிட்டு, ஏகார்த்தி, திடயார்த்தி, த்ரியார்த்தி, சதுரார்த்தி பஞ்சார்த்தி என்ற தீபங்களைக் கட்டி திடதீபங்களைக் காட்டி(ரூபந்தேஹி ஜயந்தேஹி பாக்யம் பகவான் தேஹமே புத்தி முக்தி பலம் தேஹி க்ருஹீத்வார்ச்யம் ஸிவாதுநா) பரமேஸ்வரா! நான் தேவரீருக்குச் சமர்ப்பிக்கும் அர்க்கியத்தை ஏற்று எனக்குச் சவுந்தர்யத்தையும் ஜயத்தையும் பாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் புத்தி, முக்தி பலவிதமான நிவேதனங்களைச் செய்து ஐந்து வர்த்திகளையுடைய தட்டுத்தீபத்தைக் காட்டி கர்ப்பூரதீபராதனை செய்து தாம்பூலம் கொடுத்து வலம் வந்து வணங்கி, குரு உபதேசித்தப்படி மந்திரங்களால் துதித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபித்து பலவித சிவ ஸ்தோத்திரங்களைக் கூறி
தாவ கஸ்த்வத் கதப்ராணஸ் தச்சித்தோஹம் ஸதாம்ருடா
கிருபாநித இதிஜ ஞாத்வா பூதநாதா ப்ரஸீதமே
என்றபடி நான் உம்முடையவன், உம்மிடத்தில் பிராணனுடையவன் உம்மிடத்திலேயே மனதையும் உடையவன் கிருபாநிதியே சகல பிராணிகளுக்கும் பிரபுவே, பூதநாதா எனக்கு நீர் பிரசன்னராக வேண்டும் என்று மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்து வணங்கி! க்ஷமாபணம் செய்து நான் மீண்டும் பூஜை செய்யும்போது இங்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும்.