Type Here to Get Search Results !

Translate

கட்டாயம் மனிதன் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

மனிதன் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

கட்டாயம் மனிதன் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது

தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டாள் புத்திர நாசம் தனது இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும் தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

ஜோதிடர் குரு நோயாளி கர்ப்பிணி மருத்துவர் சந்நியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும் இது மிகவும் புண்ணியமாகும்

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்


அண்ணியை தினசரி வணங்க வேண்டும்

பசு தேர் நெய் குடம் அரசு வில்வம் அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்

குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது ஒரு கையை தரையில் ஊன்றிக்கொண்டு சாப்பிடக் கூடாது துணியில்லாமல் குளிக்கக் கூடாது சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது

கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது மழை பெய்யும் போது ஓடக் கூடாது தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது

நெருப்பை வாயால் ஊதக்கூடாது

மலஜலம் கழிக்கும் போது இரவில் தெற்கு முகமாகவும் மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்கவேண்டும் கிழக்கு மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது

பெண்கள் எதிர்பாராத விதத்தில் தவறு என்று தெரியாமலே கற்பை இழந்து விட்டாலோ புண்ணிய நதியில் 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும் அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு திருமணம் காலதாமதமாகும் அப்படி இல்லை என்றால் குழந்தை பாக்கியம் காலதாமதமாகும்

குழந்தை இல்லாதவன் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன்
திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன் நிறுத்தக்கூடாது

சாப்பிடும்போது முதலில் இனிப்பு பிறகு உவர்ப்பு புளிப்பு கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின் நீர் அருந்த வேண்டும்

சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது

பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும் திருமணத்திலும் பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்

கோவணம் இன்றி வீட்டின் நிலைப்படியில் தாண்டக்கூடாது

இருட்டில் சாப்பிடக்கூடாது சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு கை அலம்பிவிட்டு பிறகு சாப்பிட தொடங்க வேண்டும்

சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது வெற்றிலையின் நுனியில் பாவமும் மூளையில் நோயும் நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்

சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறும் மனையோ வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்

மனைவி கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர கணவன் மனைவிக்கும் மகன் தாய்க்கும் பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது

குரு ஜோதிடர் வைத்தியர் சகோதரி ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது

ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது.

தலையையோ உடம்பையோ வலக் கையால் மட்டும் சொறிய வேண்டும்
இரண்டு கைகளாலும் சொறிய கூடாது

இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது

வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்

தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ தரையிலோ படுக்கக் கூடாது

வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது

மயிர் சாம்பல் எலும்பு மண்டையோடு பஞ்சு உமி கொட்டான் சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது

ஈரக் காலுடன் படுக்கக் கூடாது

வடக்கிலும் கோணத் திசைகளிலும் தலை வைத்துப் படுக்கக்கூடாது நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது

ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது

சிகரெட் பீடி துண்டுகளை அணைக்காமல் தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு பூமி மனை கிடைக்காமல் போய் விடும்

பகைவன் அவனது நண்பர்கள் கள்வன் கெட்டவன் பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது

பெற்ற தாய் சாபம் செய்நன்றி கொல்லுதல் பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தம் இல்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

அங்கவஹீனர்கள் ஆறு விரல் உடையவர்கள் கல்வி இல்லாதவர்கள் முதியோர் வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

ரிஷி குரு ஜோதிடர் புரோகிதர் குடும்ப வைத்தியர் மகான்கள் கெட்ட ஸ்திரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்தவோ கூடாது.

பிறர் தரித்த உடைகள் செருப்பு மாலை படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது

பிணப்புகை இளவெயில் தீப நிழல் இவை நம் மீது படக்கூடாது

பசு மாட்டினை காலால் உதைப்பது அடிப்பது தீனி போடாமல் இருப்பது இவை பாவங்களாகும்

பசு மாட்டினை கோ மாதாவாக எண்ணி சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு மாட்டுக்கு புல் தவிடு தண்ணீர் புண்ணாக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகவும் புண்ணியமாகும்

தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது தூங்குபவரை பார்க்கக் கூடாது

பகலில் உறங்குவது உடலுறவு கொள்வது பால் பருக்குவது கூடாது.

தலை முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது

அண்ணன் தம்பி அக்காள் தங்கை ஆசிரியர் மாணவர் கணவன் மனைவி குழந்தையும் தாயும் பசுவும் கன்றும் இவர்களுக்கு இடையில் எப்பொழுதும் செல்லக் கூடாது

நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சி தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது

வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும் வேறு வழியில் நுழையக்கூடாது

கையால் மோரைக் குழப்பக்கூடாது

தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம உறுப்பையும் பிற பெண்களுடையதையும் பார்க்கக்கூடாது.

நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad