சுக்ரபகவானால் ஏற்படும் தோஷங்களும் நிவர்த்தி பரிகாரங்களும்
தேவகுருவின் திட்டம் இதுதானா?
தேவர்கள் பல்வேறு முறையில் போரில் ரூடவ்டுபட்டு அசுரர்களிடம் தோல்வியை தழுவினார்கள். மேலும், இறந்த அசுரர்கள் மீண்டும் உயிர்ப் பெற்ற பின் மிகவும் அதிக பலத்துடன் போரில் ரூடவ்டுபட்டனர். இதனால் தேவர்கள் மிகவும் கலக்கமுற்றனர்.
எனவே தேவர்களின் தலைவனான தேவேந்திரன் தம் தேவகுருவான பிரகஸ்பதியுடன் ஆலோசனை செய்தார். போரில் அசுரர்கள் வெற்றி பெற மூலக்காரணம் சுக்கிரனின் சஞ்சீவினி என்பதை அறிந்த பிரகஸ்பதி அதை செயல் இழக்கச் செய்ய ஒரு திட்டம் தீட்டினார்.
தன் மகனின்(கச்சன்) மூலம் சஞ்சீவினி மந்திரத்தை செயல் இழக்க வைக்க தன் மகனை வேத பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பிரகஸ்பதி. கச்சனும் சுக்கிராச்சாரியாரிடம் சீடனாக சேர்ந்து வேதம் கற்க சென்றார். அப்போது சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி கச்சனை ஒரு தலையாக விரும்பினாள்.
அசுரர்கள் கச்சனை பல முறை கொன்றும் தேவயானி வேண்டுதலுக்கு இணங்கி, சுக்கிராச்சாரியார் கச்சனை பல முறை உயிர் பெறச் செய்தார். இதையெல்லாம் பார்த்த அசுரர்கள் கச்சனை கொன்று அவரை எரித்து அந்த சாம்பலை சுக்கிராச்சாரியார் அருந்தும் சோமபானத்தில் கலந்தனர். இதை அறியாத சுக்கிராச்சாரியர் அந்த பானத்தை அருந்த கச்சனும் சுக்கிரனின் வயிற்றுக்குள் சென்று விடுகிறார்.
பின்பு, தேவயானி வேண்டுகோளுக்கு இணங்க அசுர குரு ஞான பார்வையால் கச்சன் இருக்கும் இடத்தை கண்டு அதிர்ந்தார். எவ்வளவு எடுத்துக்கூறியும் புரியாத நிலையில் இருந்த மகளை கண்டு வேறு வழி இல்லாததால் கச்சனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொடுக்க முடிவெடுத்தார். சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து கச்சன் வெளிவந்த போது சுக்கிராச்சாரியார் மரணம் அடைந்தார்.
சஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெற்று அசுர குருவின் வயிற்றில் இருந்து வெளிவந்த கச்சன் தன் குருவான அசுரகுருவை உயிர்பெறச் செய்தார். இதன் மூலம் சஞ்சீவினி மந்திரம் செயல் இழந்து போனது சுக்கிராச்சாரியாருக்கு. பின்னர் தன் ஞான திருஷடியால் பிரகஸ்பதியின் சூழ்ச்சியால் தான் எல்லாம் நிகழ்ந்தது என அறிந்தார் சுக்கிராச்சாரியார்.
அசுரகுரு தேவகுருவிற்கு அளித்த சாபம் :
பின்னர் அசுரர்களை அழைத்து நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்துக்கூறி, அசுரர்களாகிய உங்களின் அறியா செயல்களால் பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்து பெற்ற சஞ்சீவினி மந்திரம் செயல் இழந்து போனது என்றார். மேலும், சஞ்சீவினி மந்திரத்தால் இனி எந்த பயனும் இல்லை என்றும், இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் மூலக்காரணம் தேவகுரு தான் என்றும் அசுரர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், தன் மகனான கச்சனை அனுப்பி இத்தனை காலங்கள் கடுந்தவம் செய்து பெற்ற வரத்தை செயல் இழக்கச்செய்து வெற்றி கண்டுள்ளார். எனவே அசுர குருவாகிய நான் தேவகுருவிற்கு சாபம் அளிக்கிறேன் என்றார். அதுமட்டுமின்றி தேவர்களும் குரு இல்லாமல் துன்பப்பட வேண்டும் என்னும் சாபத்தை அளித்தார் அசுர குரு.
அசுர குருவின் இந்த சாபத்தால் தேவகுரு தேவர்களுக்கு உதவாமல் மறைந்து போனார். இதனால் தேவர்கள், தங்களை வழிநடத்துவதற்கு சரியான குரு இல்லாமல் பல இன்னல்களை அனுபவித்தார்கள். அசுர குலத்தின் அரசனான மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியாரின் அறிவுரைப்படி பல வேள்விகள் மற்றும் தானங்களைச் செய்து தேவலோகத்தின் தேவேந்திர பதவியை அடைய முயன்றனர். இதையறிந்த தேவேந்திரன் மகாவிஷணுவிடம் இந்நிகழ்வை எடுத்துக்கூறி, இதற்கு ஒரு தீர்வை அளிக்குமாறு பணிந்து நின்றார்.
எனவே, மகாவிஷணுவும் வாமன அவதாரம் எடுத்து அசுர குல அரசனிடம் யாசகம் கேட்க சென்றார். ஆனால், வந்திருப்பவர் யார் என்பதை தன் ஞான திருஷடி மூலம் அறிந்த சுக்கிராச்சாரியார் அரசனிடம் எந்த வாக்குறுதியையும் அளிக்க வேண்டாம் என்றார்.
விஷணுவிற்கு இடையூறு ஏற்படுத்திய அசுரகுரு :
அசுர குல அரசனோ பிராமண தோஷம் தம்மை பற்றிக்கொள்ளும் என்பதை அறிந்து வேண்டுவனவற்றை கேள் என்றார். வாமன அவதாரத்தில் இருந்த விஷணுவும் மூன்றடி நிலம் வேண்டும் எனக் கூறினார்.
இடம் தானே எடுத்துக்கொள் என்று தனது வாக்குறுதியை தாரை வார்த்தார் மகாபலி சக்கரவர்த்தி. விஷணுவும் கமண்டலத்தில் இருந்து தண்ணீரை கையில் ஊற்ற முற்பட்டபோது அசுர குரு சிறிய வண்டாக மாறி கமண்டலத்தில் தண்ணீர் வரும் பாதையில் அடைப்பை ஏற்படுத்தினார்.
இதையறிந்த விஷணு, தர்ப்பைக் குச்சியைக் கொண்டு கமண்டலத்தின் அடைப்பை குத்த முற்பட்டபோது அது வண்டுவின் கண்களில் குத்தியது. இந்நிகழ்வால் சுக்கிரன் தம்முடைய ஒரு கண்ணை இழந்தார். இப்படி பல்வேறு சூழல்களில் அசுரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை காப்பாற்றினார் அசுர குரு.
சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் :
சுக்கிரன் அஸ்தமனம், நீசம் மற்றும் பகை பெற்றால் கீழ்க்கண்ட நிகழ்வுகளால் துன்பங்கள் உண்டாகும். அவை,
திருமண வாழ்வில் திருப்தி இல்லாத நிலை.
வாகனங்களால் பண முடக்கம் ஏற்படுவது.
பெண்களால் பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள்.
சர்க்கரை வியாதி, கண் நோய் போன்றவை ஏற்படுதல்.
பரிகாரங்கள் :
கஞ்சனூர் என்னும் ஊரிலுள்ள அக்கனீஸ்வரரை வணங்கி வர சுக்கிரனால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.
வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை வழிபட சகல தோஷமும் நீங்கும்.
தங்களின் வசதிக்கேற்ப வெண்ணிற ஆடைகள், வெள்ளி செந்தாமரை, வெள்ளை மொச்சை போன்றவற்றை தானம் செய்வதால் சுக்கிரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.