Type Here to Get Search Results !

Translate

கடன் வாங்கினா உங்களை தேடி வறுமை வரும்!

 




கடன் வாங்கினா உங்களை தேடி வறுமை வரும்!
கடன் வாங்கினா உங்களை தேடி வறுமை வரும்!

கடன் வாங்கினா உங்களை தேடி வறுமை வரும்!

கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது நமக்கு தெரியமலேயே போய்விடுகிறது.

அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், வறுமை நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே மற்றவர்களிடம் இருந்து எந்த பொருட்களை வாங்கினால், வறுமை நம்மை தேடி வரும் என தெரிந்துக் கொள்வோம்...!

பேனா :

ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால், அந்த பொருள் மிகவும் மோசமான வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க வழிவகுக்கும்.

படுக்கை :

கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டையை வரவழைப்பதோடு, உறவு முறிவடையவும் வாய்ப்புள்ளது. 

கை கடிகாரம் :

மற்றவர்களிடம் கை கடிகாரம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்கும். எனவே யாரிடமும் கைக்கடிகாரத்தை வாங்காதீர்கள்.

உடைகள் :

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது நல்ல ஐடியாவாக இருக்கலாம். ஆனால் அப்படி உடைகளை பகிர்ந்து கொண்டால், அது நிதி பிரச்சனைகளை உண்டாக்கும்.

கைக்குட்டை :

கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால், அதனால் கிருமிகள் மட்டும் பரவுவதில்லை, மிகவும் மோசமான வறுமையும் தான் ஏற்படும்.

பணம் :

மற்றவர்களிடம் கடனாக பணம் வாங்கினால், அதனால் அவர்களுடனான உறவு முறிவடைவது மட்டுமின்றி, பணம் வாங்கும் போது வாங்கியவரின் கையின் வழியே துரதிர்ஷ;டமும் தான் வரும்.

செழிப்பான வாழ்வைப் பெற மற்றவர்களிடம் இருந்து வாங்கும் பொருளை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும்...!







கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad