Type Here to Get Search Results !

Translate

அணைத்து நலன்களும் கிடைக்கும் மந்திர விபூதி செய்முறை

மந்திர விபூதி செய்முறை


மந்திர விபூதி செய்முறை 

5 வரட்டி ஆகும் அளவிற்கு பசும் சாணத்தில் ஒருபிடி வில்வ இலை ஒரு பிடி கண்டங்கத்திரி இலை ஒரு பிடி தும்பை இலை ஒரு பிடி கருமத்த நிலை மேலும் ஒரு பிடி கொன்றைமலர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் மேலும் கற்பூர வில்வம் மற்றும் மகாவில்வம் இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் மேலும் ஒரு பிடி சுத்தமான ஆல இலை சுத்தமான அரச இல்லை சேர்த்துக்கொள்ளவும் இத்துடன் ஒரு பிடி அளவிற்கு தர்ப்பைப்புல் சேர்த்து பசும் சாணத்தில் கலந்து வரட்டி தட்டவும் ஐந்து நாட்கள் நன்றாக வெயிலில் காய வைத்து புது சட்டி வாங்கி அதில் அனைத்தும் போட்டு எரிய விட்டு சுத்தமான சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் அத்துடன் கீழ் உள்ள பொருட்கள் சேர்க்கவும்

  • ஜவ்வாது 5 கிராம்
  • பச்சைக் கற்பூரம் 5 கிராம்
  • குங்குமப்பூ ஒரு கிராம்
  • ஏலக்காய்-2
  • கிராம்பு 2
  • ஜாதிபத்திரி 5 கிராம்
  • நவபாஷாணம் அனைத்தும் சேர்த்து 1 கிராம்
  • ஒரிஜினல் புனுகு ஒரு கிராம்
  • ஒரிஜினல் அம்பர் ஒரு கிராம்
  • ஒரிஜினல் கோரோசனை ஒரு கிராம்
  • ஒரிஜினல் கஸ்தூரி ஒரு கிராம்
  • சுத்தமான அர்த்தர் 5ml
  • சுத்தமான பன்னீர் 150 ml

5 கிராம் அளவிற்கு கொஞ்சம் பஞ்சகவியம் இவை அனைத்தும் பொடிசெய்து சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் கொட்டி ஜலிக்க வேண்டும் ஜொலித்து வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை மெல்லிய காட்டன் துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வ குடுவிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் நமசிவய- யநமசிவ-வயநமசி-சிவயநம-மசிவயன எனக்கு அனைத்தும் வசி வசி சிவ சிவ ஸ்வாக


இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றாள் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும் காரியசித்தி 100% நடக்கும் மேலும் சிவனின் அருள் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad