Type Here to Get Search Results !

Translate

செய்வினை ஜாதக ரீதியாக யாரை பாதிக்கும், அதற்கான பரிகாரங்களும்

Astro Jothidam - செய்வினை நீங்க


செய்வினை ஜாதக ரீதியாக யாரை பாதிக்கும்?

செய்வினை என்றால் என்ன?
முன்ஜென்மத்தில் நாம் செய்த வினையால், இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் தான் செய்வினை ஆகும்.

ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை என்கின்றனர். ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.

செய்வினை யாரை பாதிக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது சந்திரன் நீச்சம் அடைந்திருந்தால், 6,8,12-ம் இடங்களில் மறைந்திருந்தால் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சந்திரன் நீச்சம் அடைந்து, அந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றால் எந்த பாதிப்பும் இல்லை. 6,8,12-இல் சந்திரன் சுபர் பார்வை, சுபர் சேர்க்கை பெற்றாலும் எந்த பாதிப்பும் இல்லை.

பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5-ம் இடம் பலம் குறைந்தாலும் கண் திருஷ;டி, செய்வினை பாதிப்பு உண்டாகும். இன்னும் ஆழமாக இந்த செய்வினை பற்றி ஆராய்ந்தால், பூர்வீகத்தில் செய்தவினைதான் தற்பொழுது செய்வினையாக பாதிக்கிறது.

ஒருவர் தெரியாமல் அல்லது தெரிந்து செய்த வினையே அவர்களை பாதிக்கிறது. தந்தை வாங்கிய கடன் மகனை பாதிப்பதுபோல பூர்வீகத்தில் செய்த தவறு இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தாலும் அது பாதிப்பை உண்டாக்கும்.

செய்வினையால் பாதிப்புகள் வந்தாலும் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதாலும், நேர்த்தி கடன்களாலும், சில பரிகாரங்களாலும் நிச்சயம் பாதிப்பை தீர்க்க முடியும்.

செய்வினை ஜாதக ரீதியாக யாரை பாதிக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் அவரின் வாழ்வை செழிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், 1,5,9-ம் அதிபதிகள் ஆவர்.

1-ம் அதிபதி (லக்னாதிபதி) மனோ பலத்தை கொடுக்கக் கூடியவர், தடைக்கற்களை படிக்கல்லாக மாற்றும் திறமையுடையவர், வெற்றியை தரக்கூடியவர்.

5-ம் அதிபதி (பூர்வ புண்ணியாதிபதி) வைராக்கிய பலத்தை தரக்கூடியவர், பூர்வ புண்ணிய பலத்தாலும், குல தெய்வ அருளாலும், அறிவாலும் எதையும் சாதிக்கும் திறனுடையவர்.

9-ம் அதிபதி (பாக்கியாதிபதி) தெய்வ அருளையும், குருவின் அருளையும், முன்னோர்களின் புனித ஆன்மாக்களின் பலத்தையும் தரக்கூடியவர், 9ம் பதி பலம் பெற்றவர்களின் வாழ்க்கை பாதையை எளிதில் கடந்து விடுவர், நமது முயற்சிகள் வெற்றி பெற்றால் அது நாம் செய்த பாக்கியம் எனக் குறிப்பிடுகிறோம்.

இம்மூவரும் ஜாதகத்தில் பலமற்று இருப்பவருக்கே செய்வினை, ஏவல்,பில்லி,சூனியம் இவற்றால் பாதிப்பு ஏற்படும்.

ராகு கேது 2,8-ல் இருப்பவரும் அவரது குடும்பமும் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் நிலை ஆகும்.

நம் எண்ணங்களும், செயல்களும் நன்றாக இருந்தால் செழிப்பான வாழ்க்கை வாழலாம். முறைப்படி குல தெய்வ வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad