Type Here to Get Search Results !

Translate

கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது?

கண் திருஷ்டி நீங்க


கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது?

நம்மை ஒருவர் பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ;டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குகின்றது.

மனிதனின் பார்வைக்கு சக்தி அதிகம். அதனால் தான் கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்ற பழமொழியை பெரியவர்கள் தங்களது அனுபவத்தை வைத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

பொதுவாக நம்மீது மற்றொருவர் பொறாமை எண்ணங்கள் கொண்ட சிந்தனையுடன் பார்க்கும் பார்வையின் தாக்குதல் நம்மை வந்து சேராமல் இருக்க வேண்டுமானால், அவர்களின் ஒட்டுமொத்த சிந்தனையையும், பார்வையையும் வேறு எதன்மீதாவது படும்படி செய்ய வேண்டும்.

புதிய வீடு கட்டியிருந்தால், வீட்டின் மேலும், வீட்டில் வசிப்பவர்களின்மீதும் கண்திருஷ;டி படாமல் இருக்க வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்கலாம். பொறாமையுடன் நம் வீட்டைப் பார்ப்பவர்கள், முதலில் வீட்டைப்பார்ப்பதற்கு முன்பாக, பாத்திரத்தில் உள்ள மலர்களைத்தான் பார்ப்பார்கள்.

அவர்களுடைய சிந்தனை முழுவதும் அந்த மலர்களைப் பார்ப்பதிலேயே போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராது. இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொண்டால் கண்திருஷ்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கண் திருஷ;டியை எடுக்கக்கூடிய குணங்கள் குறிப்பாக தாவரங்களுக்கு நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் அமைப்பது, ரோஜா முட்கள் உள்ள செடி வைப்பது, பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவது, கற்றாழையைக் கட்டித் தொங்க விடுவது போன்ற சிறு சிறு பரிகாரங்களைச் செய்வதன் மூலமாக மனிதர்களின் கண்திருஷ;டியில் இருந்து தப்பலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad