சீரான வாழ்வுக்கு சிவன் துதிகள்
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
கடர்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற என்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதிதேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கடல் திரு ஆலவாய்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உந்தன் விருப்பு அன்றே!