1.பித்ரு தோஷம் நீங்க எந்தெந்த திதிகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி, அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கான தர்ப்பணங்களை செய்யலாம்.
முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைத்தால் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.
2. அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாமா?
அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாம். மற்ற நாட்களை விட அமாவாசையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.
3. அமாவாசை விரதம் என்றால் என்ன?
அமாவாசையன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, வீடு முழுவதையும் கல் உப்பினை கலந்த நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
பின் வீட்டின் அருகாமையிலுள்ள அல்லது மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று வந்த பின்பு உணவு உண்ணவும்.
உடல் நிலைக்கு தகுந்தவாறு விரதத்தை கடைபிடிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும்.
அமாவாசை தினங்களில் அசைவ உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.
4.அமாவாசைக்கு அடுத்த நாள் வெளியூர் பயணம் செல்லலாமா?
அமாவாசைக்கு அடுத்த நாள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்று.
தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும் பட்சத்தில் சென்று வரவும். ஆனால், எதிர்பார்த்த காரியம் முடிவடைய காலதாமதமாகும்.
5.அமாவாசையில் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லலாமா?
முதன் முதலில் சிகிச்சையை அமாவாசையில் செய்யக்கூடாது.