கண் திருஷ்டி பரிகாரங்கள்
சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.
நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மன உளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ;டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்பார்கள். கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷடி ஆகும்.
கண் திருஷடி நீங்க சில பரிகாரங்கள்
வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.
தாவரங்களுக்கு கண் திருஷ;டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. எனவே வீட்டின் முன் தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம் அல்லது பூச்செடிகள் வைக்கலாம்.
வீட்டின் வாசல் முன் பூசணிக்காயை கட்டித் தொங்க விடலாம் அல்லது நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைக்கலாம்.
வீட்டு வாசலில் கண் திருஷ;டி விநாயகரை மாட்டி வைக்கலாம் அல்லது கற்றாழையைக் கட்டித் தொங்க விடலாம்.
ஒருவர் மேல் உள்ள கண் திருஷ;டி போக கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ;டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி, மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்.
குடும்பத்தில் உள்ளவரின் கண் திருஷ;டி போக தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும்.
கண் திருஷடி நீங்க மந்திரங்கள்.
ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ;ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்
ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி
இந்த மந்திரத்தினை 21 நாட்கள் தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் துதித்து வந்தால் கண் திருஷடி நீங்கும்.